தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரிய வீடுகள் கடைகள் வாங்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி How to apply online to buy Housing Board houses and shops across Tamil Nadu
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடுகள் வாங்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான விற்பனைக்குரிய வீடு மற்றும் மனைகளை இணையதளம் மூலம் எளிதில் வாங்கும் வகையில் புதிய இணையவழி விற்பனைத் தளம் துவங்கப்பட்டுள்ளது.
தற்போது பல்வேறு திட்டங்களின் கீழ் விற்பனைக்கு உள்ள 7,659 குடியிருப்பு அலகுகள் இணைய வழியில் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதில் 2,842 அலகுகளுக்குக் குலுக்கல் முறையிலும் (21.08.2026 முதல்), 2,184 அலகுகளுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையிலும் (24.08.2026 முதல்), 1,749 அலகுகளுக்குப் பொது ஒதுக்கீடு முறையிலும் (25.08.2026 முதல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், இந்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள எந்தவொரு அடுக்குமாடி குடியிருப்புக்கும் விலை உயர்வு ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விற்பனைக்குத் தயாராக உள்ள 884 வணிக அலகுகள் (கடைகள், பிரதான வணிக மனைகள் மற்றும் பொது உபயோக மனைகள்) 'e-Tender cum e-Auction' முறையில் மின் ஏலம் விடப்படவுள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள் 25.08.2026 முதல் 24.09.2026 வரை 'Tamil Nadu e-Tenders Portal' மூலம் பெறப்படும்.
விண்ணப்பப் பதிவேற்றத்திற்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கிக் கொள்வதுடன் தேவையான ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இந்த வெளிப்படையான இணையவழிச் செயல்பாட்டின் மூலம் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றித் தங்களுக்குத் தேவையான வீடு மற்றும் மனைகளை எளிதில் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் (TNHB) வீடுகள், மனைகள் மற்றும் சில வணிகக் கடைகள்/வளாகங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போதைய TNHB இணையதளத்தில் “Apply / Book Property” வசதி உள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
TNHB அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்“Apply / Book Property” என்பதைத் தேர்வு செய்யவும்.
விற்பனைக்கு உள்ள வீடு / அடுக்குமாடி குடியிருப்பு / மனை / வணிகப் பயன்பாட்டு சொத்து ஆகியவற்றில் தேவையான திட்டத்தைத் தேர்வு செய்யவும்.
மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் Login / Registration செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், வருமானம் உள்ளிட்ட தேவையான தகவல்களை நிரப்பவும்.
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். பொதுவாக வயது, இருப்பிடம், வருமானம், PAN, ஆதார், புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான இடங்களில் இடஒதுக்கீட்டு சான்றிதழ் போன்றவை கேட்கப்படலாம்.
பொருந்தும் விண்ணப்பக் கட்டணம் / பதிவு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பத்தை Submit செய்து Application Number / Acknowledgement-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
பின்னர் Application Status / Lottery / Allottee Login மூலம் நிலையைப் பார்க்கலாம்.கு
றிப்பு: ஒவ்வொரு திட்டத்திற்கும் தகுதி, விலை, கட்டணம், விண்ணப்ப காலக்கெடு மற்றும் ஒதுக்கீட்டு முறை மாறுபடலாம். எனவே குறிப்பிட்ட திட்டத்தின் TNHB அறிவிப்பை பார்த்து மட்டுமே விண்ணப்பிக்கவும். 2026-ல் கோயம்பேடு மற்றும் திருச்சி வரகனேரி உள்ளிட்ட திட்டங்களுக்கு இணையவழி விண்ணப்பங்கள் TNHB அறிவித்துள்ளது
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cmsapi.tnhb.org.in/uploads/notificationPdfs/ebe0301f587b6b754f198b419350400e.pdf
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cmsapi.tnhb.org.in/uploads/notificationPdfs/739a1d9e6e2a1f33987fb957b4347262.pdf
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cmsapi.tnhb.org.in/uploads/notificationPdfs/10235eca82d3b0ebda198ee0b683f0d9.pdf
Tags: தமிழக செய்திகள்













