Breaking News

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க ரேசன் கார்டு தேவையில்லை! தமிழக அரசு அறிவிப்பு Ration card not required to buy goods at ration shops! Tamil Nadu government announcement.

அட்மின் மீடியா
0
ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க ரேசன் கார்டு தேவையில்லை! தமிழக அரசு அறிவிப்பு Ration card not required to buy goods at ration shops! Tamil Nadu government announcement.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அசல் (Physical) ரேஷன் கார்டு தேவையில்லை; கைப்பேசியில் உள்ள ரேஷன் கார்டின் மென்பிரதி (Soft Copy) அல்லது அட்டை எண் (Card Number) மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு போதும்.

பொதுமக்கள் ரேஷன் கடைக்குச் செல்லும்போது அசல் ஸ்மார்ட் ரேஷன் கார்டைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை.




கைப்பேசியில் உள்ள டிஜிட்டல் ரேஷன் கார்டு அல்லது கார்டு எண் இருந்தால் மட்டுமே போதுமானது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் P. Venkataramanan இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நியாய விலை கடைகளில் பொருள்கள் வாங்க, குடும்ப அட்டைக்கு தொடர்புடைய கடைக்குதான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை, அருகில் இருக்கும் எந்த கடையிலும் பொருள்கள் வாங்கலாம். 

ரேஷனில் பொருள் வாங்க குடும்ப அட்டை கட்டாயமில்லை, அட்டையின் புகைப்படம் அல்லது அட்டையின் எண் இருந்தால்கூட போதும். - சட்டமன்றத்தில் அமைச்சர் வெங்கடரமணன் அறிவிப்பு

சட்டப்பேரவையில் இன்று தனது துறை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வெங்கடரமணன், மாநிலம் முழுவதும் 38,438 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். 

அதிகபட்சமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1,495 கடைகள் இயங்கி வருவதாகத் தெரிவித்தார். இதற்கு, அடுத்தபடியாகச் சேலம் மாவட்டத்தில் அதிக அளவிலான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்குத் தங்கள் வீட்டின் அருகே செயல்பட்டு வரும் குறிப்பிட்ட கடைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும், அசல் ரேசன் கார்டு கையில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் விளக்கினார். 

தற்போது, அனைத்து ரேசன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. எனவே, மொபைல் போனில் ரேஷன் அட்டையின் 'சாப்ட் காப்பி' (PDF அல்லது புகைப்படம்) இருந்தாலோ, அல்லது ரேஷன் அட்டை எண் நினைவில் இருந்தாலோ போதுமானது.

தமிழ்நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் அத்தியாவசியப் பொருட்களை எந்தவிதச் சிக்கலுமின்றி எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback