Breaking News

மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை - என்ன நடந்தது?

அட்மின் மீடியா
0

கர்நாடகா வனத்துறையில் ‘என்கவுண்ட்டரில்’ 3 வேட்டைக்காரர்களை சுட்டுக் கொன்றதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் தமிழர்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில் காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதிக்குட்பட்ட தோமை​யார்​பாளை​யம் அருகே சிலர் சட்​ட​ விரோத​மாக மான்​களை வேட்​டை​யாடு​வ​தாக நேற்​று​ முன்​தினம் இரவு வனத்​துறை​யினருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்​து,வனத்துறை போலீசார் இரு குழுக்​களாக பிரிந்து சென்று கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள வனப்​பகு​தி​யில் வனத்​துறை​யினர் ரோந்து பணி​யின்​போது, வனப்பகுதிக்குள் மான் வேட்டையாடி இறைச்சியைப் பிரித்துக் கொண்டிருந்த கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காக வனத்துறையினர் நடத்திய பதிலடித் துப்பாக்கிச் சூட்டில் ம‌ரியமங்​கலம் கிராமத்தை சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூரு​வில் உள்ள அரசு மருத்துவமனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையாடப் செல்லவில்லை; அப்பாவி பொதுமக்கள் என்று கூறி அவர்களது உறவினர்களும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த கொடூர படுகொலையைக் கண்டித்து  கொள்​ளே​கால், ஹனூர், தோமை​யார் பாளை​யம், ஜகன்​னாத தொட்டி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள‌ வனத்​துறை அலு​வல​கத்தை அடித்து நொறுக்​கினர்.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “ வனப்பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback