Breaking News

கொலம்பியாவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - கட்டிடங்கள் இடிந்து விழுந்த அச்சத்தில் பதறியடித்து ஓடிய மக்கள் வீடியோ

அட்மின் மீடியா
0

கொலம்பியாவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - கட்டிடங்கள் இடிந்து விழுந்த அச்சத்தில் பதறியடித்து ஓடிய  மக்கள்  வீடியோ



கொலம்பியாவில் நேற்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 132 பேர் உயிரிழந்தனர். பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேற்கு கொலம்பியாவில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 132 பேர் உயிரிழந்தனர் மற்றும் 87 பேர் படுகாயமடைந்துள்ளனர்

ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 107 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.கொலம்பியாவின் காபி உற்பத்தி மண்டலமான ரிசடால்டாவில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

மணிசாலேஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற கேதட்ரல் கோபுரம் இடிந்து விழுந்தது.காளி மற்றும் பெரெய்ரா நகரங்களில் பல்லடுக்கு கட்டடங்கள் சரிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

அதிபர் அபிலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா நாடு முழுவதும் தேசிய அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிக்கே அரசு முதலிடம் அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரெய்ரா, மணிசாலேஸ், குய்ப்டோ உள்ளிட்ட நகரங்களில் உள்ள 6 விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.நிலநடுக்கத்திற்கு பிறகு 21-க்கும் மேற்பட்ட அதிர்வுகள் பதிவாகியுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/pizytor/status/2086857432488202642

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/sustainme_in/status/2086893655294656852

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/DheeraKL/status/2086881413283066183

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/forestcat289/status/2086847125267394674

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/ravindraJourno/status/2086877820966605120

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback