Breaking News

சென்னை பக்கிங்காம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் வெளியான முக்கிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சென்னை பக்கிங்காம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம் வெளியான முக்கிய அறிவிப்பு



சென்னையிலிருந்து எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக நீர் மெட்ரோ போக்குவரத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை (DFR) மற்றும் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அழைத்துள்ளது.

சென்னையில் பஸ், ரயில், விமானம், கப்பல் என 4 வகையான போக்குவரத்து சாதனங்கள் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் சென்னைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னையின் மிக முக்கியமான நீர் வழித்தடங்களில் ஒன்றாக பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இந்நிலையில் பக்கிங்காம் கால்வாயில், வாட்டர் மெட்ரோ எனப்படும் படகு போக்குவரத்து சேவையைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. 

இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்கச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை சுமார் 53 கிலோமீட்டர் தூரத்திற்கு வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. 

இது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர், திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. .

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பக்கிங்காம் கால்வாய் வழியாகப் படகுகள் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்றது. இந்நிலையில் அத்தகைய பாரம்பரிய நீர்வழிப் போக்குவரத்தை மீட்டெடுக்கும் வகையில், பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback