நடிகர் ரஜினிகாந்த் கேரள மாநிலத்தின் ஆளுநராகிறார் என பரவும் செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
நடிகர் ரஜினிகாந்த் கேரள மாநிலத்தின் ஆளுநராகிறார் என பரவும் செய்தி உண்மையா?
சமூகவலைதளங்களில் பரவும் செய்தி:-
கேரளா மாநிலத்தின் ஆளுநராகிறார் நடிகர் ரஜினிகாந்த்! விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியீடுகிறது மத்திய அரசு
தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருப்பது ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதிலாக ரஜினிகாந்தை ஆளுநரக நியமிக்கிறது மத்திய அரசு, ரஜினிகாந்தின் நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியீடு!ரஜினிகாந்தின் நியமனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது
என சன் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவுகின்றது
உண்மை என்ன:-
கேரள மாநிலத்தின் ஆளுநராகிறார் நடிகர் ரஜினிகாந்த்” எனப் பரவி நியூஸ்கார்டு போலியானது.
கேரள மாநிலத்தின் ஆளுநராக ரஜினிகாந்தை நியமிப்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மேலும் பரவி வரும் நியூஸ்கார்டை சன் நியூஸ் வெளியிடவில்லை எனவே இது ஒரு பொய்யான செய்தியாகும்.
அது போல் அறிவிப்பு வந்தால் நாம் கண்டிப்பாக செய்தி வெளியிடுகின்றோம்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK