Breaking News

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 18ம் தேதிவரை கனமழை பெய்யும் மாவட்டங்கள் பட்டியல் இதோ Here is the list of districts that will receive heavy rains until the 18th due to the low pressure area formed in the Bay of Bengal.

அட்மின் மீடியா
0

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 18ம் தேதிவரை கனமழை பெய்யும் மாவட்டங்கள் பட்டியல் இதோ Here is the list of districts that will receive heavy rains until the 18th due to the low pressure area formed in the Bay of Bengal.



வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசம் - மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிரமடைந்துள்ள இப் வளிமண்டலக் சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை நோக்கிச் செல்லக்கூடும். அவ்வாறு நகரும் போது இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தீவிர நகர்வு காரணமாகக் கடலோரப் பகுதிகள் மற்றும் வடமாநிலங்களின் பல இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மீன்பிடிப் படகுகள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், கடலோர மாவட்ட நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது

▼ தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.

12-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

13-08-2026 நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

14-08-2026: நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

15-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு மழை இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான பெய்யக்கூடும்.

16-08-2026 மற்றும் 17-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

18-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback