கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை.. 52 கோயில்களின் விவரத்தை வெளியிட்ட அறநிலையத்துறை
52 கோயில்களுக்கு இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை.. கோயில்களின் விவரத்தை வெளியிட்டது அறநிலையத்துறை
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உள்ளது. இருந்தாலும், சில கோயில்களில் புகைப்படம், வீடியோ, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் உள்ளிட்டவற்றை பக்தர்கள் பதிவு செய்வதாக புகார்கள் எழுந்தன.
இதனால், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாக தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்தது.
இதன் மூலம், இன்று முதல் (செப்.1) தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 52 கோயில்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாகவும், செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்

