இந்திய தபால் துறையில் வேலை..10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு கிடையாது உடனே விண்ணப்பியுங்கள்
இந்திய தபால் துறையில் வேலை..10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு கிடையாது உடனே விண்ணப்பியுங்கள் Job in Indian Postal Department..10th class students can apply. No exam. Apply immediately.
கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது வெளியாகியுள்ளது
நாடு முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2,095 பணியிடங்கள் உள்ளன. டிவிஷன் வாரியாக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது. இந்த காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு எதுவும் கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மார்க் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும்.
மேலும் கணிணி அறிவு அவசியம். சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
21.09.2026 தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம்.
எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 45 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 43 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 கட்ட்டணம் ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
21.09.2026 அன்று மாலை 05.00 மணி வரை ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்;-
https://indiapost.gov.in/gdsonlineengagement
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு
