முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை தேர்தல் ஆணையம் உத்தரவு.
அட்மின் மீடியா
0
முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை தேர்தல் ஆணையம் உத்தரவு.
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு.
2021 தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற அசன் மௌலானா, தேர்தல் செலவுக் கணக்குகளை முறைப்படி சமர்ப்பிக்கத் தவறியதால் 3 ஆண்டு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசன் மௌலானா, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். அந்த தேர்தலில் தேர்தல் செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்ற புகார் எழுந்தது.
அதாவது தான் தேர்தலில் ரூ. 17 லட்சம் செலவு செய்ததாகக் காட்டியுளளார். அதுதவிர ரூ. 33 லட்சம் அளவிலான செலவை மறைத்தது தெரியவந்தது.
தேர்தல் செலவினம் ரூ. 30 லட்சம் என்ற வரம்பை மீறி அவர் செலவிட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டே தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அசன் மௌலானாவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
சமீபத்தில் இதுதொடர்பான புகாரில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விசாரணைகளுக்கு ஆஜராகி அவர் விளக்கம் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டியதுடன் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் அசன் மௌலானா போட்டியிடத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
