Breaking News

கல்லூரி பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய டிவிஎஸ் 50 பைக் 4 மாணவிகள் பலியான சோகம் அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கல்லூரி பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில் நான்கு மாணவிகள் உயிரிழந்துள்ளனர். CCTV காட்சி

In a horrific accident near Thiruchengode in Namakkal district, four girl students from the same family lost their lives in a collision between a college bus and a two-wheeler. CCTV footage


நாமக்கல் திருச்செங்கோடு அருகே கல்லூரி பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய டிவிஎஸ் 50 பைக். பைக்கில் வந்த 4 பெண்களும் பலியான சோகம்

பள்ளி முடிந்த பின்பு தனுஸ்ரீ, நிவேதா, அபிநயா ஆகியோர் பைக்கில் புறப்பட்டுள்ளனர். கல்லூரி முடிந்து வந்த கலைச்செல்வி பாதி வழியில் லிஃப்ட் கேட்டு ஏறியுள்ளார். 4 பேரும் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் கல்லூரி பேருந்து மோதியதில் உயிரிழந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 4 மாணவிகள் மீது எதிரே வந்த கல்லூரிப் பேருந்து மோதியது. இந்தச் சோக விபத்தில் தனுஸ்ரீ, நிவேதா, அபிநயா கலைச்செல்வி ஆகிய 4 பேரும் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

இந்தச் சம்பவம் குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. 

ராசிபுரம் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் பிரவீன்(23) என்பவர் கைது. அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், இறப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை.

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம். கொன்னையார் கிராமத்தில் 03.09.2026 அன்று மாலை, கல்லூரியில் பயின்றுவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வி சுபிதா (வயது 19) த/பெ சேகர் என்ற மாணவி பள்ளியில் பயின்றுவரும் தனது சகோதரிகளான செல்வி நிவேதா (வயது 17) த/பெ. சேகர். செல்வி தனுஸ்ரீ (வயது 13), த/பெ. சேகர் மற்றும் செல்வி அபிநயா (வயது 12), த/பெ.ரமேஷ்பாபு ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்லும்போது. தனியார் கல்லூரிப் பேருந்தில் மோதிய விபத்தில் செல்வி நிவேதா. செல்வி தனுஸ்ரீ மற்றும் செல்வி அபிநயா ஆகியோர் சம்பவ இடத்திலேயும். செல்வி சுபிதா என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும். வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.என் அறிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback