Breaking News

புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க 'எரிவாயு இணைப்பு இரசீது' கட்டாயம் இல்லை - தமிழக அரசு

அட்மின் மீடியா
0

புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க 'எரிவாயு இணைப்பு இரசீது' கட்டாயம் இல்லை



புதிய ரேஷன் கார்டுக்கு, விண்ணப்பத்துடன் காஸ் சிலிண்டர் ரசீது இணைப்பது கட்டாயம் இல்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. 

அதில் எரிவாயு இணைப்பு இரசீது கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. மக்கள் சாசனம் 2018ன் படி புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு 60 நாட்கள் என கால வரையறை செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் குடும்ப அட்டை விண்ணப்பம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டை கட்டாய ஆவணமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 

குடும்ப அட்டை பெற விரும்புவோர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையுடன் எரிவாயு இணைப்பு ரசீது, சொத்துவரி ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீதி ஆகியஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்கும்போது முகவரி ஆதாரமாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback