2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கும்..! உலக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கும்..! உலக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வு மேலும் வலுவடைந்து, மிகவும் தீவிரமான ஒன்றாக மாறி 2027 பிப்ரவரி வரை நீடிக்கும் என்று உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.
உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ]தற்போதைய எல் நினோ முந்தைய ஆண்டுகளை விட மிகவும் சக்திவாய்ந்ததாக உருவெடுத்து வருகிறது.
வரும் மாதங்களில் மேலும் தீவிரமடைந்து, 2026ம் ஆண்டின் இறுதிக்குள் அதன் உச்சத்தை எட்டும். உலகம் எங்கும் உள்ள பெரும்பாலான நிலப்பரப்புகளில் இயல்பை விட அதிகமான வெப்பநிலையும், தீவிர வெப்ப அலைகளும் ஏற்படும்.
உலகளவில் மழைப்பொழிவு மற்றும் வானிலை முறைகளில் கடுமையான மாற்றங்கள் ஏற்படும்.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பலவீனமடைந்து, கடுமையான வறட்சி மற்றும் பற்றாக்குறை ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளதால், இந்த ஆண்டின் இறுதியில் எல் நினோ தனது உச்சக்கட்ட வீரியத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எல் நினோ' என்பது பசிபிக் கடல்நீரின் மேற்பரப்பு வெப்பம் அதிகரித்து, அது உலக சராசரி வெப்பநிலையை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் ஒரு காலநிலை நிகழ்வு. இதனால் பருவமழை பொய்த்து, வறட்சி ஏற்படும். பயிர் விளைச்சல் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு, எரிசக்தி பற்றாக்குறை உள்ளிட்ட பல பாதிப்புகள் உருவாகும். 'எல் நினோ' பாதிப்பால், உலக பொருளாதாரத்தில் ரூ. 478 லட்சம் கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்படும். இது 1982 - 1983ல் உருவான 'எல் நினோ' ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பை விட அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
Tags: வெளிநாட்டு செய்திகள்
