தமிழகம் முழுவதும் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் முழு விபரம் இதோ
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் முழு விபரம் இதோ
தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் சாய்குமார் உத்தரவு.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலராக டி.மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஸ்ரேயா சிங் தொழில்கல்வித் துறை கூடுதல் செயலராக நியமனம்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்), தாகரே சுபம் ஞானதேவ் ராஜ் நியமனம்.
சுற்றுலாத் துறை இயக்குநர் ஜெயசீலன் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத் துறை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக ராஜகோபால் சுங்கரா நியமனம்.
விருதுநகர் ஆட்சியராக இருந்த சுகபுத்ரா சென்னை குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம்.
பெரம்பலூர் ஆட்சியராக இருந்த சரண்யா அரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொன்னேரி உதவி ஆட்சியராக இருந்த அப்துல் ரசாக், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு உதவி ஆட்சியராக இருந்த வி.நல்லசிவன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி.ரவிக்குமார், வேளாண்மை-உழவர் நலத் துறை இணைச் செயலராக மாற்றம்.
Tags: தமிழக செய்திகள்
