Breaking News

2027 மார்ச் முதல் டோல்கேட் இல்லாதே இந்தியா!.. வாகனம் நிறுத்தாமல் சுங்கக் கட்டணம் புதிய நடைமுறை அமல்..! நிதின் கட்காரி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 2027 மாா்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் எண்ம சுங்கச் சாவடி கட்டண வசூல்: நிதின் கட்கரி‘சுங்கச் சாவடிகளில் முற்றிலும் எண்ம முறையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை வரும் 2027-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் அறிமுகம் செய்யப்படும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். India to be toll-free from March 2027!.. New system of toll collection without parking implemented..! Nitin Gadkari announces



சுங்கச் சாவடிகளில் முற்றிலும் எண்ம முறையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை வரும் 2027-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் அறிமுகம் செய்யப்படும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.‘

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சா்வதேச நிதி தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சா் நிதி கட்கரி, 

தற்போது வானங்கள் டோல்கேட்டில் நிற்பதை தவிர்க்கவும், எரிபொருள் விரயத்தை குறைக்கவும் மற்றும் டோல் நிர்வாக செலவுகளை கட்டுப்படுத்தவும் இந்திய அரசு ‘மல்டி லேன் ஃப்ரி ஃப்ளோ’ (Multi lane free flow tolling system) தடையற்ற டிஜிட்டல் டோல் முறையை கொண்டு வரவிருக்கிறது. வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் சிறிதும் நிற்காமல் நேரடியாக செல்லும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் அமைக்கப்படவுள்ளது.

செயற்கைக்கோள், ஏஐ மற்றும் பாஸ்டேக் இணைந்த இத்தொழில்நுட்பப் பணிகள் ஆண்டிறுதிக்குள் 70% நிறையும். ஆண்டுக்கு 71 கோடி மணிநேரமும், 56 கோடி லிட்டர் எரிபொருளும் வீணாவது இதனால் தவிர்க்கப்படும். பாஸ்டேக்கை வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

சுங்கச் சாவடிகளில், வாகன ஓட்டிகள் நிற்காமல் தடையின்றி செல்லும் வகையிலான எண்ம கட்டண வசூல் நடைமுறை சோதனை அடிப்படையில் ஒரு சில சுங்கச்சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வரும் டிசம்பா் மாத இறுதிக்குள், 70 சதவீத சுங்கச் சாவடிகளில், எண்ம கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்தப்படும். 

வரும் 2027-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள், நாடு முழுவதும் 100 சதவீத அளவுக்கு எண்ம வசூல் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்

பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தியதன் மூலம், சுங்கக் கட்டண வசூலும் அதிகரித்துள்ளது. முன்னா் ரூ. 7,000 கோடியாக இருந்தது தற்போது ரூ. 82,000 கோடிக்கும் மேல் வசூலாகிறது. என்றாா்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback