இன்று முதல் அமல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி சான்றிதழ்களை ஆன்லைனிலேயே டவுன்லோடு செய்யலாம்! you can download driving licenses and RC certificates online!
இன்று முதல் அமல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி சான்றிதழ்களை ஆன்லைனிலேயே டவுன்லோடு செய்யலாம்! you can download driving licenses and RC certificates online!
கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே இணையம் வழியே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.
முதலமைச்சரின் அறிவிப்பிற்கு இணங்க இன்று முதல் இந்தச் புதிய நடைமுறை அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு முறைப்படி அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய முறையின் படி புதிய வாகனம் வாங்கினால், அதற்கான பதிவை முடித்தவுடன் டிஜிட்டல் பதிவு சான்றிதழை இணையம் வழியாக நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேபோல் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு முடிந்த அன்றைய தினமே, டிரைவிங் லைசென்ஸ் டிஜிட்டல் முறையில் தரப்படும்.
டிஜிட்டல் ஆவணங்களில் உள்ள க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வழியாக அரசு அலுவலகங்கள், அதிகாரப்பூர்வ அமைப்புகள் மின்னணு முறையில் ஆவணங்களை மிகவும் எளிதாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இந்த டிஜிட்டல் சான்றிதழ்களை ஓராண்டுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
அனைத்து டிஜிட்டல் ஆவணங்களிலும் ஒரு க்யூஆர் குறியீடு இடம்பெற்று இருக்கும். அதை பயன்படுத்தி அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளலாம்
Tags: தமிழக செய்திகள்
