Breaking News

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..! விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் PM YASASVI Scheme

அட்மின் மீடியா
0

ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!



2026 - 27ம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் நடப்பாண்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும், தமிழகத்தை சேர்ந்த தகுதியான மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https:// Scholarships.gov.in) கல்வி உதவித்தொகை திட்டத்தை பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில், கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக ஒரு ஆண்டுக்கு, அதிகபட்சமாக, 9 முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, 75 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு வழங்கும்.

இந்த திட்டத்தில், கடந்த நிதி ஆண்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் அல்லது சீர் மரபினர் பிரிவை சேர்ந்தவர்களின், குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

2025 - 26ம் கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில், கடந்த நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ, மாணவியர்கள் நட்பாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு விண்ணப்பத்தினை, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து, இம்மாதம், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் சரி பார்க்க வேண்டும்.

2026 - 27ம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 தகுதியுள்ள மாணவர்களுக்கு விண்ணப்பத்திற்கான தேதி இணையதளத்தில் அறிவிக்கப்படும். இத்தகவல், மாவட்ட நிர்வாகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க:-

https://yet.nta.ac.in/frontend/web/

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

30.09.2025

PM YASASVI (PM Young Achievers’ Scholarship Award Scheme for Vibrant India) என்பது OBC, EBC மற்றும் DNT பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமாகும். 

யார் விண்ணப்பிக்கலாம்?

 கல்லூரி / உயர்கல்விக்கான Top Class Education திட்டத்தில்: OBC / EBC / DNT பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள Top Class கல்வி நிறுவனங்களில் முழுநேரப் படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். IIT, NIT, IIIT, IIM, AIIMS, NIFT, NLU உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள் இதில் அடங்கலாம். 

எவ்வளவு உதவித்தொகை? 

தகுதியான மாணவர்களுக்கு திட்ட விதிகளின்படி: முழு கல்விக் கட்டணம் மற்றும் non-refundable charges மாதம் ₹3,000 வாழ்க்கைச் செலவு ஆண்டுக்கு ₹5,000 புத்தகங்கள் மற்றும் stationery படிப்புக் காலத்தில் ஒருமுறை ₹45,000 வரை laptop/computer மற்றும் accessories உதவி ஆகியவை வழங்கப்படுகின்றன. தொகை DBT மூலம் மாணவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. 

விண்ணப்பிப்பது எப்படி? 

National Scholarship Portal (NSP) செல்லவும். முதலில் One Time Registration (OTR) செய்ய வேண்டும். 

OTR என்பது மாணவருக்கான 14 இலக்க தனிப்பட்ட பதிவு எண். OTR ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.

 Apply For Scholarship என்பதைத் தேர்வு செய்யவும். PM YASASVI Central Sector Scheme of Top Class Education திட்டத்தைத் தேர்வு செய்யவும். கல்வி, சாதி, வருமானம், வங்கி மற்றும் சேர்க்கை விவரங்களை நிரப்பவும். தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். 

விண்ணப்பத்தை Submit செய்து Application ID/Status-ஐ சேமித்து வைத்துக்கொள்ளவும். உங்கள் கல்வி நிறுவனம் விண்ணப்பத்தை சரிபார்க்கும். NSP-யில் 2026-27 கல்வியாண்டுக்கான PM YASASVI College திட்டத்தின் மாணவர் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி தற்போது 31.10.2026 எனக் காட்டப்படுகிறது. 

தேவையான ஆவணங்கள் 

ஆதார் / OTR விவரங்கள் 

OBC/EBC/DNT சாதிச் சான்றிதழ் 

குடும்ப வருமானச் சான்றிதழ் 

கல்வி / சேர்க்கை விவரங்கள் 

வங்கி கணக்கு விவரங்கள் 

கட்டண விவரங்கள் நிறுவனத்தின் admission/rank தொடர்பான விவரங்கள் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback