Breaking News

தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

அட்மின் மீடியா
0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்!

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் திமுக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

 ஓபிஎஸ் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து முறைப்படி இணைந்தார் ஓபிஎஸ்-க்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை போற்றி வரவேற்றார்!

ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து அவரது மகன் ரவீந்திரநாத்தும், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் சிலரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர். 

 திமுகவில் இணைந்தது ஏன்? - ஓபிஎஸ் விளக்கம்

திமுகவில் மகிழ்ச்சியோடு இணைந்துள்ளேன் 

என்னை திமுகவில் இணைத்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

அதிமுகவின் தாய் கழகத்தில் இணைந்துள்ளேன் 

அண்ணா, கருணாநிதி வழியில் ஆட்சி செய்கிறார் மு.க.ஸ்டாலின்

சர்வாதிகாரியாக, ஆணவத்துடன் இபிஎஸ் நடந்து கொள்கிறார்

அதிமுக இனி வெற்றி பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது - ஓபிஎஸ்

Give Us Your Feedback