இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டார்- அமெரிக்கா அதிபர் அறிவிப்பு Trump says Iranian Supreme Leader Ali Khamenei is dead
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிபர் அறிவிப்பு
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலில், ஈரான் உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டதாக அதிபர்கள் ட்ரம்ப், நெதன்யாகு கூட்டாக அறிவிப்பு.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி இந்தத் தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்டன.
ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை சனிக்கிழமை தொடங்கின. முதல் தாக்குதல், ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி அலுவலகம் அருகே நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின
இந்த தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதற்கு சாத்தியமான நிறைய அறிகுறிகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில நிமிடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கமேனி கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்கள் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.அவர் தெரிவித்திருப்பதாவது
வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி உயிரிழந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, உலகளவில் கமேனியின் ரத்தவெறி கும்பலால் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதி.அமெரிக்காவின் உளவுத் துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. மேலும், இஸ்ரேலும் நெருக்கமாகப் பணியாற்றியதால், அவராலும், அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை.ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது. இனி ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் பிற பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் போராட விரும்பவில்லை.
தேச பக்தர்களுடன் ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒன்றிணைந்து, நாட்டை மகத்துவமாக்க செயல்படும் என்று நம்புகிறோம். அந்த செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும். கமேனியின் கொலை மட்டுமல்ல, நாடே ஒரே நாளில் சுத்தம் செய்யப்பட்டது.இருப்பினும், ஒரு வார காலம் அல்லது மத்திய கிழக்கில் முழு அமைதி என்ற நோக்கத்தை அடையும் வரை துல்லியமான தாக்குதல்கள் தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கமேனி மட்டுமல்லாமல், அவரது மருமகன், பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்சாதே, புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளாகள்
ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, இஸ்ரேல் மீதும், அமெரிக்க படைகள் மீதும் ஈரான் பதில் தாக்குதலைத் தொடங்கியது. வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் ஈரான் ஏவுகணைகள் தாக்கின.
Tags: வெளிநாட்டு செய்திகள்
