கோவையில் ஆம்புலன்சில் இருந்து வெளியே விழுந்த நோயாளி என்று பரவும் வீடியோ உண்மை என்ன
கோவையில் ஆம்புலன்சில் இருந்து வெளியே விழுந்த நோயாளி என்று பரவும் வீடியோ உண்மை என்ன
பரவும் செய்தி:-
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக சாலையில் ஓர் ஆம்புலன்ஸ் ஒன்று செல்கிறது. அப்போது, அதன் பின்பக்கக் கதவு திடீரெனத் திறந்து கொள்கிறது. அடுத்த நொடியே, நோயாளி ஒருவர் சிகிச்சைப் படுக்கையுடன் (Stretcher) சாலையில் விழுவது போல அந்தக் காட்சி இருந்தது.
அந்த வீடியோவுடன் கோவை மாவட்டம் அவினாசி சாலை என்று குறிப்பிட்டு "கோவையில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தை எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாது" என்று பரவியது
உண்மை என்ன:-
கோவை அவினாசிசாலையில் ஆம்புலன்ஸில் இருந்து நோயாளி தவறி விழுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கமளித்துள்ளது.
Tags: FACT CHECK