வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள் சஸ்பெண்ட் நடந்தது என்ன முழு விவரம்
வகுப்பறையில் மது அருந்திய தனியார் பள்ளியை சேர்ந்த 6 மாணவிகள் சஸ்பெண்ட் நடந்தது என்ன முழு விவரம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், பள்ளிச் சீருடையில் வகுப்பறைக்குள் மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 மாணவிகள் மீது பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் மாணவிகள் வட்டமாக அமர்ந்து, கொஞ்சமும் பயமோ கூச்சமோ இல்லாமல் 'சியர்ஸ்' எனக் கூறிச் சிரித்தபடி மது அருந்தும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சில மாணவிகள் 'எனக்கும் வேண்டும்' எனக் கேட்டு மதுவை வாங்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து அரசு சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, வகுப்பறையில் மது அருந்தும் அளவுக்கு மாணவிகளுக்கு எப்படித் துணிச்சல் வந்தது, ஆசிரியர்கள் கண்காணிக்கத் தவறியது ஏன், இந்தச் சம்பவம் பள்ளி நேரத்தில் நடைபெற்றதா அல்லது பள்ளி முடிந்த பிறகா என்பது உள்ளிட்டப் பல விஷயங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=fE7qhCAt1ug
Tags: தமிழக செய்திகள்
