முஸ்லிம் பெண்ணின் ஹிஜாப் இழுப்பு வைரலாகும் வீடியோ -சர்ச்சையில் சிக்கிய பீகார் முதல்வர் Bihar CM Nitish Kumar viral video
பீகாரில் இஸ்லாமிய பெண் மருத்துவருக்கு பணி ஆணை வழங்கியபோது, அவருடைய ஹிஜாபை முதல்வர் நிதிஷ் குமார் இழுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. Bihar CM Nitish Kumar viral video
பாட்னாவில் உள்ள முதல்வரின் செயலகமான 'சம்வாத்'தில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, பீகார் அரசு அமைச்சர்கள் விஜய் குமார் சவுத்ரி, சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு 1,283 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் 10 பேருக்கு நியமனக் கடிதங்களை நிதிஷ் குமார் வழங்கினார், மீதமுள்ளவர்கள் ஆன்லைனில் பெற்றனர். அதில் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் அழைக்கப்பட்டபோது, அவர் ஹிஜாப் அணிந்து வந்திருந்தார். அப்போது அந்தப் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றும்படி சைகை காட்டினார். அந்தப் பெண் ஹிஜாப்பை அகற்றும் முன்பே, நிதிஷ் குமார் ஹிஜாப்பை பிடித்து கீழே இழுத்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/2000769631686980048
Tags: இந்திய செய்திகள்
