வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி முழு விவரம் how to download voter id online
மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை டிஜிட்டல் வோட்டர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்லலாம்
வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளவர்கள், தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:- https://voters.eci.gov.in/login
முதலில் https://voters.eci.gov.in/ க்கு செல்லவும். அடுத்து அதில் epic download
என்பதை கிளிக் செய்யவும் அல்லது https://voters.eci.gov.in/signup என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து அதில் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து send otp என்பதை கொடுக்கவும் அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிடுங்கள்
அடுத்து உங்கள் பெயர் மற்றும் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவு செய்யுங்கள் அடுத்ததாக ஒரு பாஸ்வேர்டு கொடுத்து ரிஜிஸ்டர் கொடுத்து விடுங்கள்
பிறகு https://voters.eci.gov.in/login என்பதை கிளிக் செய்து லாகின் செய்யவும்
அதில் உங்கள் மொபைல் எண் மற்றும் உங்கள் பாஸ்வேர்டு கொடுத்து உள் நுழையுங்கள்
அதில்"Download e-EPIC" என்பதை கிளிக் செய்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் கொடுத்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை ரெடி அதனை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்
இந்தத் தளத்தில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக உங்கள் மொபைல் நம்பர் கொண்டு ஒரு கணக்கைத் துவங்க வேண்டும்.
கணக்கைத் துவங்கிய பின்பு லாக் இன் செய்த உடனேயே உங்கள் கணக்கில் டவுன்லோடு E-EPIC (Electronic Electoral Photo Identity Card) என்ற ஆஃப்ஷன் இருக்கும். இதைக் கிளிக் செய்ய வேண்டும்.
Tags: முக்கிய செய்தி
