Breaking News

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவித்த தேர்தல் ஆணையம் அட்டவணை முழு விவரம்!

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் தேதியைசற்றுமுன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வெளியிட்டார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், “அசாமில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும், தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது” என அறிவித்தார்.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் உள்ளன. நகர்புறங்களில் 30,967 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகளும் உள்ளன.தேர்தல் பணிக்காக 1,444 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்” என்றார்.

அதன்படி தமிழகத்தில் வரும் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் வரும் ஏப்.6, 

வேட்புமனு பரிசீலனை ஏப்.7ம் தேதி, 

வேட்பு மனுவை திரும்பப் பெறுவது ஏப்.9ம் தேதி,

வாக்குப்பதிவு ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback