Breaking News

பிறை தென்படவில்லை ஈதுல் பித்ர் நாளை அறிவித்த சவூதி அரேபியா மற்றும் அமீரகம் Saudi Arabia announced Ramadan 2026

அட்மின் மீடியா
0

சவூதி அரேபியாவில் இந்த வருடத்திற்கான ரமலான் மாதத்தின் 29 வது நாளான இன்று ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படாததால், இந்த வருட ரமலான் மாதம் 30 நாட்களாக இருக்கும் என்று சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது.



இதன் மூலம் வரும் வெள்ளிக்கிழமை, மார்ச் 20ம் தேதி (ஷவ்வால் மாதம் 1 ம் தேதி) நாடு முழுவதும் ஈத் அல் ஃபித்ர் கொண்டாடப்படும் என்றும், நாட்டில் உள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துக்களையும் சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழுவானது குடியிருப்பாளர்களை இன்று மார்ச் 18ம் தேதி பிறை பார்க்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில், ஷவ்வால் மாத பிறையானது இன்று தென்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளானது நாளை மறுநாள் மார்ச் 20ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் நாளை ரமலான் மாதத்தின் கடைசி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றே, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் மார்ச் 20ம் தேதி அன்று ஈத் அல் ஃபித்ரை கொண்டாடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: மார்க்க செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback