மின் கட்டணம் செலுத்த 3 விதமான சலுகைகள்- அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகள்தோறும் மின் கணக்கிடும் முறையை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கு முதல் முறையாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. என அமைச்சர் செந்தில் பாலாஜி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி.....
1. கடந்த மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத்திற்கு 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தி கொள்ளலாம்
2.மே மாதத்திற்கு முந்தைய மாத மின் கட்டணத்தை (ஏப்ரல் மாதம்) செலுத்தலாம்.
3. அல்லது வீடுகளில் உள்ள மின் மீட்டரில் பதிவாகி இருக்கும் மின்பதிவு அளவீட்டை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அதை மின் அலுவலகத்திற்கு சென்று காண்பித்தால் அதை கணக்கீடு செய்து தொகையை செலுத்தி கொள்ளலாம்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 3 வாய்ப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் எதை விரும்புகிறார்களோ? அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். என தெரிவித்துள்ளார்
மின்கட்டணம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) June 11, 2021
1. மே 2019 கட்டணம்
2. கடந்த மாதக் கட்டணம்
3. இம்மாத ரீடிங்கை வாட்ஸ் அப்பில் அனுப்பலாம்.
இம்மூன்றில் ஒன்றை வாடிக்கையாளரே தேர்ந்தெடுக்கலாம்.
குழப்பங்கள் இருந்தால் தீர்வு காண அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கிறேன்.(1/2) https://t.co/pobvZDztnY
உங்கள் வீட்டு மின்சார மீட்டர் ரீடிங்கை மின்சார வாரியத்திற்கு அனுப்புவது எப்படி? அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்கள் முழுவிவரம்
https://www.adminmedia.in/2021/05/blog-post_457.html
உங்கள் வீட்டு மின்சார கட்டணம் எத்தனை யூனிட் ஒடியிருக்கு எவ்வளவு தொகை என்று தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2020/11/blog-post_36.html
மின் கட்டணம் எவ்வளவு மொபைல் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?
https://www.adminmedia.in/2020/07/blog-post_99.html
புதுச்சேரி மக்களே மின் கட்டணத்தை உங்கள் மொபைலில் கட்டுவது எப்படி? பார்ப்போம் வாங்க
https://www.adminmedia.in/2020/06/blog-post_60.html
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி..?
https://www.adminmedia.in/2020/03/blog-post_396.html
ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்க
https://www.adminmedia.in/2020/11/blog-post_7.html
மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இனி ஆன்லைன்லயே மாத்திக்கலாம்
Tags: தமிழக செய்திகள்
