Breaking News

உங்கள் வீட்டு மின்சார மீட்டர் ரீடிங்கை மின்சார வாரியத்திற்கு அனுப்புவது எப்படி? அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்கள் முழுவிவரம்

அட்மின் மீடியா
0

மின்கட்டண விவரத்தை அறிந்து கொள்ள, மின்சார வாரியம் புதிய வழிமுறையை அறிவித்துள்ளது.





கொரானா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் மின் கணக்கீடு எடுக்கபடமால் உள்ளது

மின் வாரியம் ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி தங்களின் மின் மீட்டரில் எவ்வளவு ரீடிங் என்று புகைப்படம் எடுத்து வாட்ஸப்பில் அல்லது இமெயில் அனுப்பினால் உங்கள் மின் கட்டணம் எவ்வளவு என தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளது


உங்கள் பகுதிக்கான உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோரின் மின்னஞ்சலுக்கோ, வாட்ஸ் அப் எண்ணுக்கோ இந்த புகைப்படத்தை அனுப்பலாம் 

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரி, வாட்ஸ் அப் உள்ளிட்ட விவரங்களை https://www.tangedco.gov.in/contact.html என்ற இணையதளத்தில் நுகர்வோர் பெறலாம் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.



உங்கள் மின் மீட்டர் ரீடிங்கை மின்சார வாரியத்திற்கு அனுப்புவது எப்படி


உங்கள் மின் மீட்டரில் உள்ள பட்டனை அழுத்துங்கள் அதில் வரிசையாக எண்கள் மாறுபடும். அதில், தேதி, நேரத்துக்குப் பிறகு சில எண்களுடன் KWH . என்று வரும். அந்த எண்தான் ரீடிங் யூனிட்  அளவாகும். 

உங்கள் மின்சார மீட்டர் ரீடிங் தெளிவாக தெரியும் படி புகைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும்.

எடுத்த புகைப்படத்தை, உங்கள் பகுதிக்கான மின்வாரிய உதவி பொறியாளருக்கு வாட்ஸப் அல்லது இமெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

புகைப்படம் அனுப்ப வேண்டிய உங்கள் பகுதிக்கான மின்வாரிய உதவி பொறியாளர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி ஆகிய விபரங்களை  https://www.tangedco.gov.in/contact.html  என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

உங்கள் பகுதிகான மின் வாரிய அதிகாரிகள் எண்ணை கீழ் கண்ட முறையில் தேடுங்கள்

முதலில் இந்த இணைய முகவரியினை கிளிக் செய்துகொள்ளுங்கள்
  


அடுத்து அதில் Distribution Regions என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்

அடுத்து அதில் கீழே உள்ள  Director Distribution  என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்

அடுத்து அதில் உங்கள் பகுதியை தேர்ந்தெடுங்கள் 

அதில் பகுதியை சேர்ந்த மின்வாரிய உதவி பொறியாளர்களின் தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி ஆகிய விபரங்கள் இருக்கும்

அடுத்து அவரது எண்ணை உங்கள் மொபைலில் சேவ் செய்து கொள்ளுங்கள் 

அடுத்து அவரது வாட்ஸப் எண்ணுக்கு மின் ரீடிங் புகைபடத்தை  அனுப்பி வையுங்கள்  அவ்வளவுதான்

அவர் மின் தொகையினை உங்களுக்கு அனுப்பிய உடன் ஆனலைன் மூலம் அல்லது மின் அலுவலகத்தில் மின் ம்\கட்டணம் கட்டிவிடுங்கள் அவ்வளவுதான்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback