பொங்கல் தொகுப்பு வழங்க ஜனவரி 2-க்குள் டோக்கன்களைத் தயார் செய்ய உத்தரவு!
பொங்கல் தொகுப்பு வழங்க ஜனவரி 2-க்குள் டோக்கன்களைத் தயார் செய்ய உத்தரவு!
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் மற்றும் டோக்கன் வினியோகம் குறித்தும் பின்வரும் அறிவுரைகளை பின்பற்றி இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது
மண்டலங்களில் செயல்படும் நியாயவிலைக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப ஜனவரி 2-ந் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் ரேஷன் அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும்.
முதல் நாள் முற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பிற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழக்கூடிய ரேஷன்கடைகள், அதிக கூட்ட நெரிசல் ஏற்படக்கூடிய ரேஷன்கடைகள் போன்ற கடைகளின் பட்டியல்கள் முன் கூட்டியே தயார் செய்யப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டம்
பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்டவை பரிசுத் தொகுப்பில் இடம்பெறுகிறது
Tags: தமிழக செய்திகள்
