Breaking News

பான் கார்டுடன் ஆதார் கார்டை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு விவரம் How to link Aadhaar with PAN card online before Dec 31

அட்மின் மீடியா
0

Pan Aadhaar Linking Last Date

How To Check Aadhaar PAN Card Link Status Online?

PAN Aadhaar Link

நீங்கள் இன்னும் உங்கள் ஆதாரை பான் கார்டுடன் இணைக்காவிட்டால், உடனே பண்ணீருங்க.. ஏனெனில் அரசாங்கம் டிசம்பர் 31, 2025-க்குள் இரண்டையும் இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் மற்றும் வருமான வரித்துறையினர் பல ஆண்டுகளாக மக்களை பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த இணைப்பைச் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதி சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். 

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

இலவசமாக பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 அன்று முடிந்துவிட்டது.பான் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.  அதற்க்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி ஆகும்.

மேலும் டிசம்பர் 31 ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காதவர்களின் பான் எண் ஜனவரி 1 முதல் செயல்படாது. எனவே, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைப்பது எப்படி  How to link Aadhaar with PAN card online

                                              



பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது எனவே உங்கள் ஆதர் கார்டையும் பான் கார்டையும் உடனே இணைத்து கொள்ளுங்கள்

உடனே உங்கள் ஆதாரையும் பான் எண்ணையும் கீழ் உள்ள லின்ங்க் மூலம் உடனே இனைத்து கொள்ளுங்கள்


முதலில் மேல் உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்

Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள விவரங்கள் பொருந்தவில்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை. 
உதாரணமாக பெயர் இரண்டிலும் ஒரே போல இல்லாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எனப்படும் ரகசிய பாஸ்வேட் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதை பூர்த்தி செய்யலாம்.

உங்க பான் கார்டு ஆதாருடன் லிங்க் ஆகியிருக்கா? செக் பன்னிக்குங்க

பலருக்கு தங்களது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். 

பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளலாம்.

உங்க பான்கார்டு ஆதாருடன் லிங்க் ஆகியிருக்கா? சரிபார்ப்பது எப்படி aadhaar pan link status

https://www.adminmedia.in/2024/07/aadhaar-pan-link-status.html

மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து உங்கள்  பான் எண் மற்றும் ஆதார் எண்ணைப் பதிவிட்டாலே போதும்.

ஒருவேளை இவை இணைக்கப்படாமல் இருந்தால் உடனே இணைத்து விடுங்கள்

உங்க பான்கார்டு ஆதாருடன் லிங்க் செய்ய வீடியோ வடிவில் தெரிந்து கொள்ளுங்கள்

https://www.youtube.com/watch?v=oc_L5hLE0NQ

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback