Breaking News

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி sir - voters enumeration form online apply

அட்மின் மீடியா
0

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி STEP By STEP  sir - voters enumeration form online apply

S.I.R. ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது எப்படி ஸ்டெப் பை ஸ்டெப் முழு விவரம் இதோ

தமிழ்நாட்டில் இன்று முதல் S.I.R. படிவங்களை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணையதளம் மூலம் (online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணினை பயன்படுத்தி இணையதளம் மூலம் (online) உள் நுழைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் "Fill Enumeration Form" என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.

இந்த வசதியினை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.

வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்திற்கு மாறும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.

தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும். மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி

STEP 1

https://voters.eci.gov.in/signup முதலில் தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லுங்கள் அல்லது இங்கு கிளிக் செய்யவும்

STEP 2

அடுத்து அதில் உங்கள் மொபைல் எண் பதிவிடவும் அடுத்து அதன் கீழ் உள்ள கேப்சா பதிவிட்டு சம்மிட் கொடுக்கவும், அடுத்து உங்கள் மொபைல்  நம்பருக்கு வரும் ஒடிபி பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்

STEP 3

அடுத்து https://voters.eci.gov.in/login அதில் லாகின் பகுதிக்கு செல்லவும் அல்லது இங்கு கிளிக் செய்யவும் அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபி பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்

STEP 4

அடுத்து வரும் பக்கத்தில் Special Intensive Revision (SIR) – 2026 என்பதில் உள்ள FILL Enumeration Form என்பதை கிளிக் செய்து அதில் தமிழ்நாடு என்பதை கிளிக் செய்யவும் அடுத்து அதில் உங்கள் வாக்காளர் அட்டை என்பதை கிளிக் செய்து அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும்

STEP 5

அடுத்து அதன் கீழ் உங்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரம் வரும் அதனை சரி பார்த்து அதன் கீழ் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் உள்ள மொபைல் எண்ணை பதிவிட்டு அதில் வரும் ஒடிபியை பதிவிடவும்

STEP 6

அடுத்து அதன் கீழ் உங்கள் பகுதி BLO பெயர் மற்றும் மொபைல் எண் அங்கு திரையில் காட்டப்படும் நீங்கள் அவரை தொடர்பு கொண்டு ஆப்லைனில் படிவம் வாங்கி அதனை நிரப்பியும் கொடுக்கலாம் அல்லது ஆன்லைனில் தொடரலாம் என இருக்கும் 

STEP 7

அடுத்து அதன் கீழ் கீழே உள்ளது போல் Select one Category என்று இருக்கும் அதில் நீங்கல் ஒன்றை செலக்ட் செய்து கொள்ளலாம் 

அதன் தமிழ் அர்த்தம் இங்கே 

My name exists in Electoral Roll of last SIR 

கடைசி SIR-ன் வாக்காளர் பட்டியலில் எனது பெயர் உள்ளது

My parents name (Father, Mother, Grandfather, Grandmother) exists in the electoral roll of last SIR 

எனது பெற்றோர் பெயர் (தந்தை, தாய், தாத்தா, பாட்டி) கடைசி SIR-ன் வாக்காளர் பட்டியலில் உள்ளது

Neither my name nor my parents name exists in the electoral roll of last SIR

கடைசி SIR-ன் வாக்காளர் பட்டியலில் எனது பெயரோ அல்லது எனது பெற்றோர் பெயரோ இல்லை.

மேற்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்றை செலக்ட் செய்து கொள்ளவும்

STEP 8

அதன் கீழ் நீங்கள் வரும் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து அதில் உங்கள் சமீபத்தைய புகைப்படத்தை அப்லோடு செய்து அதன் கீழ் உள்ள சப்மிட் என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வளவு தான்

STEP 9

அடுத்து அதில் வரும் ரெபரன்ஸ் நம்பரை ஸ்கீரின்ஷாட் செய்து எடுத்து வைத்து கொள்ளுங்கள் அல்லது தனியாக குறித்து வைத்து கொள்ளுங்கள்




SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html


Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback