Breaking News

மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு இன்று காலையே ரூ.5000 வரவு வைப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு இன்று காலையே ரூ.5000 வரவு வைப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!


மகளிர் உரிமை தொகை - யார் தடை ஏற்படுத்தினாலும் பின்வாங்க மாட்டோம்!" மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் 

மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2000  என இன்று காலையே ரூ.5000 வரவு வைப்பு 

தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback