நடிகை குஷ்பு குறித்து சர்ச்சைப் பேச்சு... திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நடிகை குஷ்பு குறித்து சர்ச்சைப் பேச்சு... திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் ஆகியோரை மிகவும் ஆபாசமாகவும், இழிவாகவும் பேசி விமர்சித்ததாகப் புகார் எழுந்தது.
குஷ்பு சுந்தர் மற்றும் ஆளுநர் தரப்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், கொளத்தூர் மற்றும் கொடுங்கையூர் போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவரது பேச்சால் கடும் சர்ச்சை எழுந்தது.
மகளிர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் கண்டனங்களும் எழுந்தன. இதையடுத்து, புகாரின் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர் வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைக்க, மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பி.ரேவதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகளில், கலகத்தை துாண்டுவது என்ற குற்றச்சாட்டை மட்டும் அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன் நிரூபிக்கவில்லை. ஆனால் மற்ற குற்றச்சாட்டுகளை, அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது எனக் கூறி, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. மேலும் ரூ.20,000 அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரேவதி உத்தரவிட்டு உள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்
