வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மீண்டும் கனமழை பெய்யும் -வானிலை ஆய்வாளர்கள் தகவல்
தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், பிப்ரவரி 20 ஆம் தேதி வாக்கில் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார்.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இலங்கை கடலோரப் பகுதியில் உருவாகி, வரும் 22 ஆம் தேதி தமிழக கரையை நெருங்கலாம் என்றும், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா என்பதைப் பொறுத்து மழையின் தீவிரம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் இதே மாத இறுதியிலும், மார்ச் மாத தொடக்கத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:பிப். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.பிப். 13 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
