Breaking News

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ளுங்கள்

அட்மின் மீடியா
0

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு முழுவதும் 20 ஆண்டுகளுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரிபார்க்கும் சிறப்பு தீவிர திருத்த பணி (Special Intensive Revision - SIR) தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணியின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உங்கள் வீட்டிற்கு வரும் போது, வீடு பூட்டியிருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. இது குறித்த சந்தேகங்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html

எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல்  இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/how-to-fill-voters-enumeration-form.html

வாக்காளர் கணக்கீட்டு படிவம் ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது எப்படி இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-voters-enumeration-form-online-apply.html

SIR கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கம் இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/sir-how-to-fill-out-india-election.html

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/11/blog-post_9.html

வாக்குச்சாவடி நிலை அலுவலர் வரும்போது, அவரிடம் இருந்து கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.


அந்த படிவத்தில் உங்கள் பெயர், வயது, முகவரி, புகைப்படம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து, உங்கள் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு அலுவலரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் உங்கள் வீட்டிற்கு வரும்போது, வீடு பூட்டியிருந்தால், அவர் உடனடியாக உங்கள் பெயரை பட்டியலில் இருந்து நீக்கிவிட மாட்டார். மாறாக, ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று முறை வருவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

பல இடங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், பகல் நேரங்களில் பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இதனால், அலுவலர்களால் உரியவர்களிடம் படிவங்களை கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மேலும், வாடகை வீடுகளில் குடியிருப்போர் அடிக்கடி வீடு மாறுவதால், அவர்களின் தற்போதைய முகவரியை கண்டறியவும் முடியாது இந்த சூழ்நிலையில் வாக்காளர்கள் என்ன செய்யவேண்டும்

வழிமுறை 1

ஒருவேளை, அலுவலர் வரும்போது நீங்கள் வீட்டில் இல்லை என்றாலோ அல்லது அவரை சந்திக்க முடியவில்லை என்றாலோ, http://voters.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், நீங்களே உங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

வழிமுறை 2

உங்கள் BLO பூத் லெவல் அதிகாரி யை அறிந்து கொள்ளுங்கள்! 

ECINET ஆப் பதிவிறக்கவும் 

📱ஆண்ட்ராய்டு: https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.app&hl=en_IN

அடுத்து அதில் தேர்தல் அதிகாரிகளுடன் இணைக்கவும் என்பதைத் தட்டவும் 

அதில் உங்கள் EPIC எண்ணை உள்ளிடவும் (உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ளது) 

அதில் உங்கள் BLO விவரங்களைக் காண்பீர்கள் — வாக்காளர் தொடர்பான எந்த உதவிக்கும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்

வழிமுறை 3

நீங்கள் அதே தொகுதிக்குள் வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தால், அந்த தகவலை அலுவலரிடம் தெரிவிக்கலாம். வேறு தொகுதிக்கு மாறியிருந்தால், பழைய தொகுதியில் உங்கள் பெயரை நீக்கிவிட்டு, புதிய தொகுதியில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback