Breaking News

வங்கக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறுமா? எங்கெல்லாம் மழை பெய்யும் முழு விவரம்

அட்மின் மீடியா
0

வங்கக் கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறுமா? எங்கெல்லாம் மழை பெய்யும் முழு விவரம்

தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (பிப்.16) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும்.

இதனால் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) முதல் பிப்.18 வரை வட வானிலையே நிலவும். தொடா்ந்து, பிப்.19, 20 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, பிப்.15-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், பிப்.16-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களிலும் மிதமான பனிப்பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback