இ ஸ்கூட்டர் வாங்க 20 ஆயிரம் மானியம் வாங்க விண்ணப்பிக்கலாம் e Scooter Subsidy
இ ஸ்கூட்டர் வாங்க 20 ஆயிரம் மானியம் வாங்க விண்ணப்பிக்கலாம் e Scooter Subsidy
ஆன்லைன் டெலிவரி வேலையில் ஈடுபடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அம்மாவட்டத்தைச் சேர்ந்த GIG தொழிலாளர்கள் இ-ஸ்கூட்டர் மானியம் ரூ.20,000 பெற விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
Swiggy, Zomato, Blinkit. Big basket, Zepto, Amazon, Flipkart, Urbanclap போன்ற இணையம் சார்ந்த நிறுவனங்களிடமிருந்து இணைய வழியாக பணி ஏற்று பணிபுரியும் GIG தொழிலாளர்களை, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்து அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது நலவாரியத்தில் பதிவு பெற்ற GIG தொழிலாளர்கள் e-scooter வாங்குவதற்கு அரசு மானியமாக ரூ.20,000/- வழங்கப்படுகிறது.
நலவாரியத்தில் GIG தொழிலாளியாக பதிவு பெறவும், பதிவு பெற்ற GIG தொழிலாளர்கள் e-scooter வாங்குவதற்கு அரசு வழங்கும் மானியம் மற்றும் இதர நலத்திட்ட உதவிகளை பெறவும் இணைய வழியாக (www.tnuwwb.tn.gov.in) விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்கள் தேவைப்படின் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 4ம் தளத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தினை நேரிலோ அல்லது 044-27426500 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு
