திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை! அண்ணன் சீர் திட்டம் விண்ணப்பிப்பது எப்படி? tamilnadu annan seer scheme
அண்ணன் சீர்திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை !தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு !
தமிழ்நாட்டின் அண்ணன் சீர் (Annan Seer) திட்டத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு (TN DIPR) வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் திருமண நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் என்ன ? எப்படி விண்ணப்பிப்பது?
திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.
05.10.2026 முத;ல் 15.01.2027 வரை உள்ள திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in @ விண்ணப்பிக்கலாம்.
திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
மணப்பெண்னின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.
திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் தகுதி சரிபார்க்கப்படும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர் திருமண பத்திரிகையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.
விண்ணப்ப நிலை குறித்து குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும்.
தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்குரிய காரணம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.



