Breaking News

நாளை உலகம் அழியபோகின்றது நூஹ் (அலை) போல் கப்பல் கட்டும் தீர்க்கத்தரிசி - கூட்டம் கூட்டமாக காத்திருக்கும் மக்கள் கானா நாட்டில் என்ன நடக்குது முழு விவரம் Ebo noah says world end on christmas

அட்மின் மீடியா
0

உலகம் அழியபோகின்றது நூஹ் (அலை) போல் கப்பல் கட்டும் தீர்க்கத்தரிசி - கானா நாட்டில் என்ன நடக்குது முழு விவரம் Ebo noah says world end on christmas 

நூஹ் நபியின் வரலாறு, 

இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் போன்ற மதங்களில் உள்ள இறைத்தூதரின் கதையாகும், இவர் சிலை வழிபாட்டை ஒழிக்கவும், ஒரே இறைவனை வழிபடவும் தன் மக்களைப் பல நூற்றாண்டுகளாக அழைத்தார்; அவர்கள் கேட்காததால், கடவுளின் கட்டளையின்படி ஒரு பெரிய கப்பலைக் கட்டி, தன்னையும், நம்பிக்கையாளர்களையும், ஒவ்வொரு விலங்கு இனத்திலிருந்தும் ஒரு ஜோடியையும் ஒரு பெரும் பிரளயத்திலிருந்து காப்பாற்றினார். 

கப்பல் (Ark): கடவுளின் கட்டளைப்படி, ஒரு பெரிய கப்பலைக் கட்டினார். பிரளயம் வந்தபோது, அதில் தன்னையும், தனது குடும்பத்தினர் (மனைவி, மகன்கள் ஷேம், ஹாம், யாஃபித்) மற்றும் பூமியில் உள்ள உயிரினங்களின் ஒவ்வொரு ஜோடியையும் ஏற்றினார்.

பிரளயம் (Flood): வானத்திலிருந்து மழை பொழிந்து, பூமியிலிருந்து நீர் ஊற்றெடுத்து, சிலை வணங்காதவர்களைத் தவிர மற்ற அனைவரும் அழிந்தனர். 

கானா நாட்டில் தீர்க்கத்தரிசி - 

கிறிஸ்துமஸ் தினமான நாளை ஒரு ராட்சத வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போவதாக, தன்னை தானே தீர்க்கத்தரிசி என சொல்லிக்கொள்ளும் கானாவை சேர்ந்த எபோ நோவா என்பவர்  கூறியுள்ளார்.

தன்னை கடவுளின் அவதாரம் என்று மக்களிடம் பரப்பியுள்ளார். இவரை உள்ளூர் மக்கள் நோவா என்றும் ஜீசஸ் என்றும் கூட அழைக்கின்றனர். இவர் கிழிந்த பழைய சாக்குத் துணிகளை அணிந்து கொண்டு, கையில் ஒரு பழமையான புத்தகத்தை ஏந்தியபடி வீடியோக்களை வெளியிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.அவர் வெளியிடும் வீடியோக்கள் தற்போது உலகமெங்கும் வைரலாகி வருகின்றன. பைபிளில் வரும் நோவாவைப் போலவே, தானும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தூதுவன் என்று அவர் பிரச்சாரம் செய்கிறார். 

மேலும் உலகம் அழிவுக்கு பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போன்ற 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் பணித்திருப்பதாக அவர் கூறி கப்பலை கட்டி வருகின்றார்

யதும், அவரை பின்தொடர்பவர்கள் தங்களது சொத்துக்களை விற்று அவருக்கு பணம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது

எபோ நோவாவின் கணிப்பின் படி , நாளை கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25 ) அன்று தொடங்கும் மழையானது நிற்காமல் 3 ஆண்டுகள் வர ராட்சசத்தனமாக பெய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த தொடர் மழையானது , மிகப் பெரிய வெள்ளமாக மாற உள்ளது. இது பிரளய காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை போல மிகப்பெரிய பேரரழிவை ஏற்படுத்த கூடும். இந்த ராட்சச வெள்ளத்தில் உலகில் உள்ள , மிக உயரமான அனைத்து சிகரங்களும் முழுகி விடும். இந்த பெரிய பிரளயம் ஒட்டு மொத்த பூமியையும் ஒரு முடிவில்லாத பெருங்கடலாக மாற்றும். வரவிருக்கும் ஜலப் பிரளயத்தில் மனிதர்கள் மட்டுமல்லாது , அனைத்து உயிரினங்களும் அழியக் கூடும்.இந்த பிரளயத்தில் இருந்து ஒருவர் தப்பிக்க வேண்டும் என்றால் , அவர்கள் தன்னுடைய பேழையில் ஏற வேண்டும் என்று கூறியுள்ளார். 

அவர், ஆதியாகமத்தில் யெகோவாவால் வழிநடத்தப்பட்ட நோவாவைப் போலவே ஒரு பேழையை உருவாக்க கடவுள் தனக்கு கட்டளையிட்டதாகக் கூறுகிறார்.

மூன்று ஆண்டு வெள்ளப்பெருக்கை தாங்கும் வகையில் பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்திருப்பதாக கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாது அவர் ஒரு சில வீடியோக்களையும் பதிவேற்றி மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார். அந்த வீடியோக்களில் விலங்குகள் ஜோடி ஜோடியாகத் அவரது இருப்பிடத்தை நோக்கி வருவதைப் போல காட்சிப்படுத்தியுள்ளார். இந்த காட்சிகளைக் கண்டு ஒரு சிலர் நம்பத் தொடங்கியுள்ளனர்.எபா நோவா ​கடவுளின் கட்டளைப்படி இந்த அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்ற 10 பிரம்மாண்ட மரப் பேழைகளை கட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதற்காக அவர் சுமார் £2,50,000 செலவில் மரங்களை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஒவ்வொரு பேழையிலும் சுமார் 5000 பேர் வரை தங்க வைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். 

அதில் பலர் தங்கள் வீடு, நிலம் மற்றும் நகைகளை விற்று, அந்தப் பணத்தை எபோ நோவாவிடம் கொடுத்துள்ளனர் . புதிய நோவாவின் பேழையில் இடம் பிடிக்க வரிசையில் நிற்கின்றனர். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2003834426556547278

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback