Breaking News

உலகம் முழுவதும் வைரலாகும் 2026 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள் முழு விவரம் Baba Vanga Predictions 2026

அட்மின் மீடியா
0

2026 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்புகள் உலகம் முழுவதும் வைரலாகி வருகின்றன.



பாபா வாங்கா என்பவர் யார்:-

பாபா வாங்கா என்பவர் பல்கேரியாவைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசி; எதிர்கால நிகழ்வுகளைக் கணிப்பதில் மிகவும் பிரபலமானவர்இவரது கணிப்புகளில் பல (9/11 தாக்குதல்கள், பிரெக்ஸிட் போன்றவை) உண்மையாகி உள்ளது

பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அடிக்கடி அழைக்கப்படும் பார்வையற்ற பல்கேரிய ஞானியான பாபா வங்கா ஒவ்வொரு வருடமும் பிறக்கும் போதும் கவனத்தின் மையமாக இருக்கிறார்.

பாபா வங்கா, 1911 ஆம் ஆண்டு தற்போது வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகாவில் வங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா என்ற பெயரில் பிறந்தார். அவர் தனது 12 வயதில் தனது பார்வையை இழந்தார். அவரை பின்பற்றுபவர்கள் இதை ஞான திருஷ்டியின் தொடக்கமாகக் கருதினர். 1970-கள் மற்றும் 1980-களில், மக்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து அவரிடம் ஆலோசனை கேட்டதால், அவர் பிரபலமானார். அவர் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தார் மற்றும் 1996 இல் தனது 85 வயதில் இறக்கும் வரை தனது கணிப்புகளை வழங்கி வந்தார். அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே 5079 ஆம் ஆண்டு வரை நடக்கவிருக்கும் நிகழ்வுகளை அவர் முன்னறிவித்ததாக பலர் நம்புகிறார்கள்.

உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் அவற்றில் பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல அவரது கணிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை. 1996ம் ஆண்டிலேயே இவர் உயிரிழந்துவிட்ட போதிலும், பாபா வங்கா இறப்பதற்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். 

பாபா வாங்கா 2026ம் ஆண்டு நடக்கும் என கூறியுள்ள சில கணிப்புகள்

இயற்கை பேரழிவுகள், பொருளாதார நெருக்கடிகள், கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு போன்ற பல ஆபத்துகள் 2026-ம் ஆண்டில் ஏற்படப் போவதாகவும், இதனால் 2026 மிகவும் ஆபத்தான ஆண்டாக மாறும் என்றும் பாபா வாங்கா கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசமான காலநிலை மாற்றத்தால் வரலாறு காணாத வெள்ளம், தீவிர வறட்சி வானிலை ஏற்படும் என்றும் இதனால் பூமியின் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்

ஏலியன்களுடன் மனிதர்கள் தொடர்பு கொள்வார்கள். 2026-ம் ஆண்டு நவம்பரில் ஒரு பெரிய விண்வெளிக்கப்பல் பூமியை நோக்கி வரும் என்று இதன் மூலம் மனிதர்கள் வேறொரு உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, வேற்றுகிரகவாசிகளுடன் பேசுவார்கள் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்

உலகம் முழுவதும் பல பகுதிகளில் மிகப்பெரும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும்

பல நாட்டு பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும், பல வங்கிகள் திவாலாகும்

தங்கத்தின் விலையில் வரலாறு காணாத மாற்றம் ஏற்படும்

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி செயல்படும்

ஆசிய- ஐரோப்பிய நாடுகளில் பெரிய போர் தொடங்கும்; இந்த போர் உலக நாடுகளின் எல்லைகளை மாற்றி அமைக்கும்

கடந்தாண்டு பல உலக நாடுகளுக்குள் இனக்கலவரங்கள், போர் நடக்கும் என்று கணித்திருந்தார் பாபா வாங்கா. 

2026-ம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து ‘உலகின் அதிபதி’ என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த தலைவர் உருவெடுப்பார் எனக் கணித்துள்ளார்.

கடலுக்கு கீழே பெரிய நகரம் கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்துள்ளார்.

2026-ல் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என கணித்துள்ளார். இதில் தைவான் மீதான கட்டுப்பாடு அல்லது தென் சீனக் கடலில் விரிவாக்கம் ஆகியவை அடங்கும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback