தானாக நகர்ந்த லாரியை முயன்றவர் உடல் நசுங்கிப் பலி! நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ
தானாக நகர்ந்த லாரியை முயன்றவர் உடல் நசுங்கிப் பலி! நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஒரு கோர விபத்து நிகழ்ந்தது.தச்சூர் மோட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் (65) என்பவர் அந்தத் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை குடோனுக்கு வந்திருந்த லாரிகளில் இருந்து அட்டைப்பெட்டிகளை இறக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரியின் ஓட்டுநர், அதன் என்ஜினை அணைக்காமலேயே வாகனத்தை விட்டு கீழே இறங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த லாரி திடீரென முன்னோக்கித் தானாக நகரத் தொடங்கியது.
லாரி நகர்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் மற்றும் சபிர் உள்ளிட்ட மூன்று தொழிலாளர்கள், வாகனத்தை நிறுத்த அதன் முன்பகுதிக்குச் சென்று கைகளால் தள்ளினர். மற்ற இரு தொழிலாளர்களும் பக்கவாட்டில் இருந்ததால் லாரி நகரும் வேகத்தைக் கண்டு உடனே விலகிக் கொண்டனர்.
ஆனால், சிவலிங்கம் லாரியை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி லாரியின் முன்பக்கத்தைத் தள்ளிக்கொண்டே பின்னோக்கிச் சென்றார்.
துரதிர்ஷ்டவசமாக, பின்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரிக்கும் நகர்ந்து வந்த லாரிக்கும் இடையில் சிவலிங்கம் சிக்கிக் கொண்டார். இரண்டு லாரிகளுக்கு இடையே உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/thetatvaindia/status/2006323196631658636
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
