திருத்தணியில் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் இறந்ததாகப் பரப்பப்படும் வதந்தி முழு விவரம்
திருத்தணியில் தாக்கப்பட்ட வடஇந்திய இளைஞர் இறந்ததாகப் பரப்பப்படும் வதந்தி
திருத்தணியில் தாக்கப்பட்ட வட மாநில இளைஞர் இறந்ததாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
திருத்தணி பகுதியில் 4 இளஞ்சிறார்களால் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் தாக்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "திருத்தணியில் தாக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர் இறந்ததாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் வதந்தி
27.12.2025 அன்று திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே சில நபர்களால் தாக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாகப் பரவும் தகவல் தவறானது.
பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்ற பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளார். தவறான செய்தியைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: FACT CHECK தமிழக செய்திகள்

