Top News

கோரோசன க்கு 1914 ல் கைமுறை பாக்கெட் வைத்தியம் என்ற தலைப்பில் ஒரு சித்த மருத்துவ புத்தகத்தில் கொரானாவிற்க்கு மருந்து என சில புகைபடங்களை  பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா பொய்யா என அட்மின் மீடியாவில் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை தன்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானதுயாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன


உலக நாடுகளே கவலையில் உள்ளது இந்த கொடிய கொரானா வைரசை கட்டுபடுத்த மருந்துகள் இல்லையே என இந்த நிலையில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் போல் வாயில் வந்ததையும் மனதில் பட்டதையும் கொரானாவிற்க்கு மருந்து என இணையம் முழுவதும் பொய்யான செய்திகள் தான் 

மேலும் சித்த மருத்துவத்தில் இதை குடிங்க அதை குடிங்க  அதை சாப்பிடுங்க, இதை சாப்பிடுங்க ,என பல  செய்திகள்  இணையம் முழுவதும் பரவி பலர் ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த வரிசையில் இதுவும் ஒன்று

கோரோன மாத்திரை 1914இல் ஒரு புத்தகத்தில் உள்ளது என்பது முற்றிலும் தவறான தகவல். 

அந்த புத்தகத்தில்  “கோரோசன” மாத்திரை என பெயரிடப்பட்டுள்ளது. 

யாரோ சிலர் அட்தில் உள்ள  “ச” என்ற எழுத்தை அழித்துள்ளார்கள்.

அதன் அசல் படம் இதுஎனவே யாரும் பொய்யான செய்தியினை ந்மபாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்

தியாகராஜா சுதர்மன் என்ற சித்த வைத்திய நிபுணரின் பேஸ்புக் பக்கத்தில்

https://m.facebook.com/story.php?story_fbid=10158517343334683&id=734329682


Share To:
கொரானாவினால் பாதிக்கபட்ட இத்தாலி மக்கள் தங்கள் பணங்களை வீதியில் வீசி விட்டார்கள் .....இந்த பணம் எங்களை காப்பாற்றவில்லை அப்புறம் எதற்கு இந்த பணம்...என்று சில புகைபடங்களை சமூகவலைதளங்களில் பலரும் ஷேர் செய்கின்றார்கள் 
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா வாசகர்கள் பலர் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த புகைபடத்தில் உள்ள சம்பவம் நடந்த நாடு இத்தாலி இல்லை

அந்த புகைபடத்தில் உள்ள சம்பவம் வெனிசுலாவில் 2018 ம் ஆண்டு நடந்தது

அந்த நாட்டில் திடிரென அரசு புதிய பணங்களை வெளியிட்டு பழைய பணங்கள் செல்லாது என அறிவித்தது அது அந்த நாட்டுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது

அந்த செல்லாத பழைய பணங்களால்  பயனில்லை என  வீதியில் பணங்களை வீசி எரிந்தார்கள், சில இடங்களில் கலவரம் நடந்தது  அப்பகுதியில் உள்ள வங்கியில் இருந்து பணங்களை வெளியே வீசி எரிந்தார்கள், 

அந்த சம்பவ புகைபடங்களை எடுத்து இத்தாலியில் நடந்தது என பொய்யக பரப்புகின்றார்கள் எனவே பொய்யான் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம்

அந்த செல்லாத ரூபாய் நோட்டுகொண்டு கிராப்ட் செய்வதை பாருங்கள்
https://www.youtube.com/watch?v=f3tpehKSJwA

அட்மின் மீடியா ஆதாரம்
அந்த செல்லாத பணம் சாலைமுழுவதும்  கொட்டிகிடப்பதை பாருங்கள்

https://www.youtube.com/watch?v=3N5kGsS8hAA

அட்மின் மீடியா ஆதாரம்
ஒருவர் தன்னிடம் இருந்த பணத்தை என்ன செய்கின்றார் என பாருங்க்ள்
https://www.youtube.com/watch?v=ehKnW3l24-o
Share To:
தமிழக முதல்வருக்கு ஜமாத்துல் உலமாவின் வேண்டுகோள்

Share To:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 
இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது டெல்லி நிஜாமுதினில்‌ உள்ள தப்லிக் ஜமாத் மாநாட்டில்‌, 1000-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ தமிழ்நாட்டின்‌ பல பகுதிகளிலிருந்து கலந்து கொண்டதாக தெரிந்துள்ளது

இவர்களில்‌ பலா்‌ தமிழ்நாட்டிற்கு திரும்ப வந்துவிட்டனர்‌. அவர்களில்‌ பலர்‌ கொரோனா நோய்‌ தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்‌ என்பது தற்போது தெரியவருகிறது. 

இதில்‌ பலரை  மாவட்ட நிர்வாகத்தால்‌ தொடர்புகொள்ள முடிந்துள்ளது. பலரை மாவட்ட நிர்வாகத்தால்‌ தொடர்புகொள்ள முடியவில்லை

தொடர்புகொள்ள முடியாதவர்கள்‌ தாமாகவே முன்‌ வந்து மாவட்ட தாங்களாக முன்வந்து அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவர்கள்‌ உரிய நேரத்தில்‌ சிகிச்சை எடுத்துக்‌ கொண்டால்‌, இவர்களது குடும்பங்களுக்கும்‌, மற்றவர்களுக்கும்‌, நோய்‌ தொற்று ஏற்படுவதை தடுக்க இயலும்‌. எனவே, இவர்கள்‌ பொறுப்புடன்‌ செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌ என தெரிவித்தார்


Share To:
தப்லிக் ஜமாத்  தலைமையகம் சார்பில் டெல்லி நிஜாமுதீன் மௌலானா அவர்கள் இன்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 
அதில் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லிக் ஜமாத் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய  அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. 

மேலும் நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டவையாகும் 

நாங்கள் இந்த மாநாடு நடத்தியதிலும், மக்களைத் தங்க வைத்ததிலும் எந்த விதமான சட்டத்தையும் மீறவில்லை. 

பிரதமர் மோடி அவர்கள் கடந்த 22-ம் தேதி ஒரு நாள் ஜனதா ஊரடங்கு அமல்படுத்தியபோதே எங்கள் நிகழ்ச்சிகளை நாங்கள் ரத்து செய்துவிட்டோம். 

அப்போதே பலர் இங்கு வந்து விட்டார்கள்  மறுநாள் புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டபோது, டெல்லி அரசு 23-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்துவிட்டது

இதனால் பல்வேறு இடங்களில் இருந்து இங்கு வந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல், போக்குவரத்து வசதி இல்லாமல் இங்கேயே தங்கிவிட்டனர். 

சிலர் நாங்கள் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொள்கிறோம் எனக் கூறி அவர் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள்

மேலும் இங்கு இருந்தவர்களுக்கு  போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கையும் வழங்கப்பட்டது. 

கடந்த 24-ம் தேதி ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல் நிலையத்திலிருந்து எங்கள் மையத்தை மூட சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு எங்கள் தரப்பில் இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல வாகன அனுமதி வழங்கிட வேண்டும் எனக் கேட்டிருந்தோம்.  ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. என தங்கள் தரப்பு நியாத்தை எடுத்து கூறி அறிக்கை வெளியிட்டுளார்கள்

அறிக்கையை முழுவதுமாக படிக்க

Share To:
ஏர்டெல் பி.எஸ்.என்.எல் லை தொடர்ந்து வோடாஃபோன் ஐடியா நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வோடாஃபோன் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில், ரூ.10 விரைவில் வாடிக்கையாளர்களுக்கு ரிசார்ஜ் ஆகும். என அறிவிப்பு மேலும் 15 ம் தேதி வரை இன்கம்மிங்  தொடரும் என்றும் தெரிவித்துள்ளது
Share To:
தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் இன்று பல்வேரு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அவை கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கபட்டுள்ளது 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு தவனைத் தொகைசெலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கபட்டுள்ளது  

மீனவ கூட்டுறவு சங்கங்கள் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கபட்டுள்ளது  

கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன்பெற்றவர்கள் தவணைத் தொகை செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது 

உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் கொடுக்கபட்டுள்ளது

இதேபோல் வாகன ஓட்டுநர் உரிமங்கள், தகுதிச் சான்றுகளை புதுப்பிப்பதற்கும், 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் 

சிப்காட் நிறுவனத்தில் தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம்.

வீட்டு வாடகை தொகையை 2 மாதம் கழித்து பெற்றுக்கொள்ளுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளது.


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு தவனைத் தொகை, சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும்
Share To:
கொரானா தாக்கத்தால் மக்கள் வீடீலேயே முடங்கி உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்


மேலும் வரும் ஜூன் மாதம் வாங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிகள் தற்போது வாங்க கூடாது என்றும் மீறினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.Share To:
சீனாவில்  வுஹான் மாகனத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் பரவி பலர் பலியாகியுள்ளார்கள்
உலக நாடுகளில் பல இதற்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன ஆனால் முடியவில்லை அதேபோல்  கடந்த ஜனவரி மாதம் முதல் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் சோதனையை அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு சொந்தமான பயோமெடிக்கல் மேம்பாட்டு ஆணையத்துடன் (BARDA) இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை தொடங்கியது. மூன்று மாத கால ஆராய்ச்சிக்கு பிறகு தற்போது கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது

இந்த தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து கூடிய விரைவில்  அங்கீகாரம் பெற்று பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தனது அதிகார பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது 

அட்மின் மீடியா ஆதாரம்.


Share To:
பிப்ரவரி 1முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 
பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு காலாவதியான FC முதல் ஓட்டுநர் உரிமம் வரை ஜூன் 30 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

Share To:
அவசரப் பயணத்திற்கு வெளியூர் செல்லும் பயணிகள் துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.


கொரானா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சைக்காக காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அனுமதி பெற்று ஊருக்குச் செல்லலாம் என முன்பு  தமிழக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், அவசரப் இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை பயணத்திற்காக வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை மாநகராட்சி துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம் எனவும் 

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிக் கடிதம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Share To:
கொரானா பீதி டிரம்புக்கு ஓதி பார்க்கிறார்கள் என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இந்த வீடியோ இரண்டு வருடங்களு முன் வந்தது டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கிருஸ்தவ பாதிரியார்கள் அவருக்காக ஆங்கிலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர் 

அதனை யாரோ எடிட் டப்பிங் செய்து அரபியில் டிரம்புக்கு ஓதி பார்க்கிறார்கள் என் பொய்யாக பரப்புகின்றனர்


அட்மின் மீடியா ஆதாரம்
பொய்யாக பரப்பபடும் வீடியோவின்  அசல் வீடியோ 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Share To:
BSNL லை தொடர்ந்து  ஏர்டெல் நிறுவனமும் தனது  ப்ரீபெய்டு சேவை யை ஏப்ரல் 17 -ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிப்பு  செய்துள்ளது
ரீசார்ஜ் செய்யப்படாவிட்டால் ரூபாய் 10 ஊக்கத்தொகையாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அந்த பணத்தை அவர்கள் பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
Share To:
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் தொலைபேசியின் ப்ரீபெய்டு சேவை ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நீட்டிப்புதொலைத் தொடா்பு சேவை வழங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை ப்ரீபெய்டு சேவையை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நீட்டிப்பதாகத் தெரிவித்துள்ளன.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் வேலிடிட்டி முடிவடைந்து, ரீசாா்ஜ் செய்ய முடியாத சந்தாதாரா்களின் வேலிடிட்டி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். மேலும், இந்த காலகட்டத்தில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவா்களுக்கு ரூ.10க்கு டாக் டைம் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்புShare To:
இன்றைய  வாட்ஸப் வதந்தி செய்தி

இன்று 30.03.2020 மாலை முதல் வாட்ஸப்பில் திடிரென சில புகைபடங்களும் ஓர் ஆடியோவும் வலம் வருகின்றது அந்த ஆடியோவில்
மருந்து வந்துருச்சி மருந்து வந்துருச்சி
தடுப்பு ஊசி கண்டுபிடிச்சிட்டான் அமெரிக்ககாரன்...அது
ஒரு ஊசி போட்டா  முன்று மணி நேரத்தில் கிளியர் ஆயிடுமா
சிங்கப்பூர்ல வந்தி இறங்கிடுச்சி
நம்ம சாமி  இருக்கானில்ல சாமி சுந்தர்ராசு மகன்...அவங்கே ஏர்போட்டுல தான் வந்து இறங்கி இருக்கு...அவே ஏர்போட்ல தான் வேலை பார்கிறான் அவங்கதான் இறக்கிருக்கிராங்க...வந்து இறங்கிருச்சி நாளைக்கு ரிலிஸ் ஆகுது
என்ற ஒரு ஆடியோவும் அந்த ஆடியோவுடன் விமான நிலையத்தில் மருந்து பெட்டிகளின் புகைபடங்களையும் ஷேர் செய்து வருகின்றார்கள்அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா வாசகர்கள் பலர் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி  பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த மருந்துகளை அமெரிக்கா அனுப்பவில்லை. சீன நாடு கொரானாவினால் பாதிக்கபட்ட பலநாடுகளுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மருத்துவ உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகின்றது அது போல் மலேசியாவிற்க்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கியது அந்த விமானநிலையம் சிங்கப்பூர் இல்லை மலேசியாவில் உள்ள சபாஹ் விமானநிலையம்

மேலும் கொரானாவிற்க்கான தடுப்பு மருந்தை இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை

எனவே பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.msn.com/en-my/news/national/sabah-gets-fresh-boost-of-medical-masks-supplies-from-china/ar-BB11RZc0


அட்மின் மீடியா ஆதாரம்

https://www.thestar.com.my/news/nation/2020/03/29/china-reciprocates-sabah039s-kindness-with-medical-supplies
Share To:
கொரோனா வைரஸ் குறித்த பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கான பதில்களை வாட்ஸ் அப்  மூலம் மக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வசதியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது
கொரானா வைரஸை விட அதன் வதந்திகள் சமூகவலைதளங்களில் வலம் வருகின்றது இதனால்  மக்களிடையே  குழப்பம் ஏற்படுகிறது.

இதற்காக வேண்டி தமிழக சுகாதாரத்துறை சார்பில் +91 9035766766 என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதில் பொதுமக்கள் தங்களுக்கான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்
Share To:
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் அனைத்து மாவட்ட எல்லைகளும் ,மாநில எல்லைகளும் மூடி சீல் வைக்கபட்டுள்ளன


இதனால்  மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர் குடும்ப  அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியில் வர பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்காக வெளியூர் வெளிமாநில பயணம் செய்யமுடியாமல் தவித்தார்கள்


 இந்நிலையில் திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய மூன்று அவசர காரணங்களுக்காக சென்னையிலிருந்து வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்ல விண்ணபிக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

பொதுமக்களுக்கு உதவும் வகையில் அதற்க்காக  ஒரு தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 

தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள், சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்களுக்கிடையோ அல்லது வெளிமாநிலங்களுக்கிடையோ பயணிக்க விரும்பினால், அவர்கள் 

அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் 75300 01100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். 


அல்லது அந்த எண்ணுக்கு  எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மூலமூம் செய்தி அனுப்பலாம்

மேலும் gcpcorona2020@gmail.com  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்.

சென்னை அல்லாமல் மற்ற இடங்களில் உள்ளவர்கள் உங்கள் பகுதியில் உள்ள வட்டாட்ச்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்

விண்ணப்பிப்பவர்களின் உண்மைத் தன்மையை விசாரித்த பிறகு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகின்றது. 

ஒரு அனுமதிச் சீட்டில் மொத்தம் 4 பேர் செல்லலாம். அனுமதிச் சீட்டில், எந்த இடத்துக்குச் செல்கிறார்கள், தேதி, நேரம், காரின் பதிவு நம்பர், நிறம், டிரைவரின் பெயர், விண்ணப்பித்தவரின் பெயர், முகவரி, செல்போன் நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. 


Share To:
சூடான நீரிலிருந்து ஒரு நீராவியை உள்ளிழுப்பதன் மூலம்  கொரோனா வைரஸை 100 சதவீதம் கொல்லும் என்று ஒரு சீன நிபுணர் அனைவருக்கும் உறுதியளிக்கிறார்.  வைரஸ் மூக்கு, தொண்டை அல்லது நுரையீரலுக்குள் நுழைந்தாலும் கூட.  கொரோனா வைரஸால் சுடு நீர் நீராவியில் நிற்க முடியாது ... உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இந்த தகவலை வட்டமிடுங்கள்.என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

உலக நாடுகளே கவலையில் உள்ளது இந்த கொடிய கொரானா வைரசை கட்டுபடுத்த மருந்துகள் இல்லையே என இந்த நிலையில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் போல் வாயில் வந்ததையும் மனதில் பட்டதையும் கொரானாவிற்க்கு மருந்து என இணையம் முழுவதும் பொய்யான செய்திகள் தான் 

மேலும் சீனாவில் மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள், அமெரிக்காவில் மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள், அதை சாபிடுங்க,  இதை சாப்பிடுங்க , இதை குடியுங்க என பல பொய் செய்திகள் தான் இணையம் முழுவதும் அந்த வரிசையில் இதுவும் ஒன்று


கோவிட் -19 என்ற  வைரஸிற்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகள் துடிக்கின்றனர், மேலும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் பணியாற்றி வருகின்றனர் .


பொதுவாக ஆவி பிடிப்பது நல்லதுதான் ஆனால் கொரானாவிற்க்கான மருந்து இல்லை 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Share To:
சென்னையில் எந்த பகுதியிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு


இன்று காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் பலரும் சென்னைக்கு ரெட் அலர்ட் என வதந்தி பரவியது

இந்நிலையில்  சென்னைக்கு ரெட் அலர்ட் அறிவிப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  

Share To:
வாட்ஸ்ஆப் செயலியில் தகவல்கள் அனுப்புவதற்கிடையே, பலரும் ஸ்டேட்டஸ் தொடர்பான வீடியோக்களை அனுப்புவது வழக்கம். 


அந்த ஸ்டேட்டஸில் அனுப்பப்படும் ஒவ்வொரு வீடியோவும் இனி 15 நொடிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 16-நொடி அல்லது அதற்கும் மேற்பட்ட வீடியோக்களை அனுப்ப முடியாது 

வாட்ஸ்ஆப்பில் இந்த ஸ்டேட்டஸ் வசதி தொடங்கப்பட்ட போது, அதில் 30 நொடிகள்  வரை வீடியோக்களை அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.


கொரோனாவைத் தவிர்க்க தற்போது ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ்ஆப் பயனாளிகள் ஸ்டேட்டஸ் மூலம் ஏராளமான வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதனால், தங்கள் சர்வர் டிராஃபிக் 'தொங்கி'விடக் கூடாது என்பதற்காக வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த வீடியோ நேரக் குறைப்பில் ஈடுபட்டுள்ளது.

மேலும், வாட்ஸ் ஆப் மூலம் போலி செய்திகள் எதுவும் பரவாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share To:
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்சாகரில் .. ரவிசங்கர் பிரசாத் என்பவர் இறந்து விட்டார் அவரது உறவினர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வரமுடியாததால் அவரது  இறுதிசடங்கினை செய்ய யாரும் இல்லை

அந்த பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ரவிசங்கரின் வீட்டிற்கு வந்து அவர் குடும்பத்தினரை ஆறுதல்படுத்தினர். அவரது மகனுடன் அவரது இறுதி சடங்கை  அங்கிருந்த இஸ்லாமியர்கள் செய்தார்கள்

அப்பகுதி இஸ்லாமியர்கள் அவரை சுமந்து சென்று அடக்கம் செய்தனர். இறுதி சடங்கில் அவரது பிரேதத்தை தூக்கி செல்லும் போது ராம் ராம் என்று கூறியது அந்த பகுதி மக்களை சிலிர்க்க வைத்தது இதுதான் மதங்களை கடந்த மனித நேயம். ஆனால் அவர் கொரானாவால் இறந்தார்  என சிலர் தவறாக சமூக வலைதளங்களில் செய்தி பதிவிடுகின்றார்கள் ஆனால் அது உண்மை இல்லை
 
Share To:
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 30) முதல்வர் பழனிசாமி அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்னர், முதல்வர் பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொரோனா தொற்றுக்கு தற்போதைய ஒரே தடுப்பு மருந்து தனிமைப்படுவது மட்டும்தான் மேலும் இதுவரை இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை 

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். மாவட்ட வாரியாக நிலைமையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சவாலான நிலையை தமிழக அரசு இதுவரை எதிர் கொண்டதில்லை.

வெளியூர் செல்ல விரும்புகின்றவர்கள் திருமணம் மற்றும் இறப்புக்கு மட்டுமே வெளியூர் செல்ல அனுமதிஅளிக்கபடும் அதற்க்கு தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் அந்த பகுதி வட்டாச்சியர்களிடம் அனுமது பெற்று செல்லலாம் என விளக்கினார்

Share To:
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் காலங்களின் செய்திகள் என்ற கிதாபில் எழுதப்பட்டுள்ள செய்தி  ஹிஜ்ரி 462 க்கு முன் எழுதப்பட்ட தகவல். என்று  ஒரு புகைப்படத்தையும் ஆடியோவையும்
ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த புத்தகத்தை  எழுதியவர்  அபு அல் ஹசன் அலி பின் அல்-ஹுசைன் பின் அலி அல்-மஸ்வூதி ஆவார்.

மேலும் காலம் பற்றிய புத்தகத்தில் 278 பக்கங்கள் மட்டுமே உள்ளது  அதில் ஒரு இடங்களில் கூட 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் பற்றியோ கொரானா வைரஸ் பற்றியோ  குறிப்பிடவில்லை


ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் பொதுவாக அந்த கால இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆங்கில மாதத்தை குறிப்பிடும் பழக்கமில்லை மாறாக அரபு மாதமாகிய ஹிஜ்ரி ஆண்டை தான் குறிப்பிடுவார்கள். ஆனால் அந்த ஆடியோவில் மார்ச் மாதம் என்று கூறுகின்றார்கள் இதுவே பொய் என்பதற்க்கு சிறந்த உதாரணம் ஆகும்

மேலும் அந்த காலத்தில் புத்தகங்களில் ஹிஜ்ரி ஆண்டுகளையும், இஸ்லாமிய மாதங்களை குறிப்பிட்டுதான் இருப்பார்கள் 

மேலும் அந்த செய்தியுடன் வரும் போட்டோவானது  போட்டோ ஷாப் எடிட்டிங் செய்யப்பட்ட புகைப்படம் ஆகும்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

இந்த செய்தி அரபு நாடுகளிலும் பரவி அதற்க்கு அங்கும் அந்த செய்தி பொய்யானது என மறுத்துள்ளார்கள் 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Share To:
நாடு முழுவதும் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது


கடந்த மார்ச் 24-ம் தேதி  நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார்

 ஆனால் 21 நாட்கள் ஊரடங்கு மேலும் பலநாட்கள் நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சரவை செயலாளர் ராஜீவ்கவுபா மறுப்பு தெரிவித்துள்ளார் எனவே யாரும் வதந்திகளை நம்பாதீர்கள்
Share To:
விடுமுறை என்றாலே சென்னை வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கூட்டம் அலைமோதும்ஆனால் கொரானா காரணமாக தற்போது  அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளார்கள்

இதனால் குழந்தைகளுக்கும் மன சோர்வு ஏற்படும் அவர்களை உற்சாகபடுத்த உங்கள் மொபைல் மூலம் வண்டலூர் பூங்காவை சுற்றிகாட்டுங்கள்


சிங்கம், புலி, யானை, காட்டு மாடு, மனித குரங்கு, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட  விலங்குகளையும் அதன் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் காணலாம்.  

மேலும்  தினசரி விலங்குகளை குளிப்பாட்டுவது, உணவூட்டுவது ஆகியவற்றை 12 மணி முதல் 4 மணி வரை காண முடியும். 
Share To:
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  யானை கடலில் நீந்தி செல்கிறது உலக அழிவின் அடையாளம் என ஒரு வீடியோவை  பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்னஅந்த யானை கடலில் நீந்தும் சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது

மேலும் அந்த சம்பவம் கடந்த 2017 ம் ஆண்டு நடந்தது


இலங்கை கடற்கரையில் 10 மைல் தொலைவில் கடலில் இருந்து  அந்த யானைகள் மீட்கப்பட்டன

மேலும் தகவலுக்காக அனைத்து விலங்குகளுக்கும் நீச்சல் தெரியும் என்பதை நினைவு வைத்துகொள்ளுங்கள்

யானை திடிரென கடலில் இருந்து வரவில்லை


அந்த கொக்கிலாய் காட்டுபகுதியில் பல தீவுகள் உள்ளன  இது காட்டில் இரண்டு பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள தீவு ஆகும் இது போல் அடிக்கடி இங்கு நிகழ்வது உண்டு என கூறுகின்றார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.theguardian.com/world/2017/jul/13/swimming-trunk-elephant-rescued-from-ocean-10-miles-off-sri-lanka-coast


அட்மின் மீடியாவின் ஆதாரம்

அந்த யானையினை கடற்படையினர் காப்பாறபட்ட வீடியோ


https://www.youtube.com/watch?v=DrSE4IRrCwI
Share To:
ஈரான் நாட்டில் கொரானா வைரஸால் வந்து இறந்த மக்களின் உடல்களை எடுத்து செல்லும் வீடியோ என ஒரு வீடியோவினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்

 அந்த வீடியோ உண்மையா என அட்மின் மீடியா வாசகர்கள் பலர் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த வீடியோ ஈரானில் நடந்தது இல்லை

அந்த வீடியோவில் உள்ள சம்பவம் கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்தது

மேலும் அந்த ஜனாசா அனைத்தும்  சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின் போது இறந்த 58 பேரின் உடல்கள் எடுத்து செல்லும் போது எடுக்க பட்ட வீடியோவாகும்

பொதுவாக மெக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பொழுது அங்கு கூடும் மக்கள் நெரிசலில் சிக்கியும் பல்வேறு காரணங்களால் இறந்த நபர்களை அங்கேயே அடக்கம் செய்து விடுவார்கள் அந்த வீடியோவை எடுத்து தவறான கருத்தை போட்டு பொய்யாக ஷேர் செய்கின்றார்கள்


அட்மின் மீடியா ஆதாரம்


https://www.youtube.com/watch?v=b0wNYZi2qUA

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Share To:

21 நாட்கள் ஊரடங்கு ஏன்? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்து உருக்கமான வேண்டுகோள்


Share To:
சவுதி அரேபியாவில் மக்கா நகருக்கு அருகில் நெருப்பும் நீரும் ஒன்றாக இருக்கின்றது  இது அழிவுக்கு அருகில் நடக்கும்.அது குர்ஆன் கூறுகிறது. கியாமத்நாளின் அடையாளம்  கவனமாக இருங்கள்.என என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம் 

அப்படியானால் உண்மை என்ன

இந்த சம்பவம் 2016ம் ஆண்டு முதல் சமூகவளைதளத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் அதில் பலரும் சவுதி என்றும் குவைத் என்றும் ,துபாய் என்றும், ஈரான் என்றும் மெக்கா என்றும் பரப்புகின்றார்கள்


ஆனால் இந்த சம்பவ வீடியோ நடந்த  இடம் ஈரான் - ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியாகும் சவுதி அரேபியாவில் மக்கா நகருக்கு அருகில் என்பதே பொய்யானது ஆகும்

மேலும் அந்த குடிநீர் பைப்பில் பெட்ரோலியம் கேஸ் கலந்து உள்ளதால் அது போல் நிகழ்துள்ளது

மேலும் இது போன்ற  எரியும்  நீரூற்று  புதிய நிகழ்வு அல்ல. மேலும் இது கியாமத் நாளின் அடையாளமும் அல்ல

தைவானின் குவான்சிலிங்கிலும் இதேபோன்ற ஒரு நீரூற்று உள்ளது, அதில் இருக்கும்  தண்ணீரில் அதிக அளவு கந்தக சல்பர் கலந்து இருப்பதால்   வெளியேறும் போது தீப்பற்றி எரிகிறது

ஜமைக்காவில்  ஒரு நீர்க் குளமும் உள்ளது அதில் மீத்தேன் அதிக அளவு இருப்பதால் அது போல் எரிந்து கொண்டு இருக்கின்றது 

மக்காவில் நீரும் நெருப்பும் ஒன்றாக உள்ளது   இது குர்ஆனில் எழுதப்பட்டுள்ளது, உலகின் முடிவின் அறிகுறிகளில் என்பது எல்லாம்  தவறானது 


அட்மின் மீடியா ஆதாரம்

ஜமைக்காவில் உள்ள எரியும் குளம் 

https://www.youtube.com/watch?v=hFDdpYbAjC0


அட்மின் மீடியா ஆதாரம்

ஈராக்கில் அதே போல் எரியும் நீர் 

https://www.youtube.com/watch?v=DBfDqDLZFTI


அதேபோன்ர ஒரு நிகழ்வு இந்தியாவில் கோதாவரி ஆற்றிலும் நிகழ்ந்தது


அட்மின் மீடியா ஆதாரம்


https://www.islamicteachings.org/forum/topic/23227-viral-video-on-a-stream-emitting-fire-and-water/

அட்மின் மீடியா ஆதாரம்


தைவான் நாட்டில் உள்ள எரியும் நீருற்று இது போல் பல உள்ளது எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Share To:
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்ரார்கள் அந்த செய்தி என்ன வென்றால் விப்ரோ உரிமையாளர் ஹசிம் பிரேம்ஜி கல்விக்காக 50ஆயிரம் கோடிகள் நன்கொடையாக அளித்துள்ளார்கள் என பலரும் ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா விடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டதுஆம் அந்த செய்தி உண்மைதான் ஆனால் அவர் இதுவரை 52,750 கோடி பணம் ஏழை எளிய மக்களுக்காக நன்கொடையாக அளித்துள்ளார் 


கடந்த 2010 ம் ஆண்டு ஹசிம் பிரேம்ஜி என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கினார் அதில் ஏழை எளிய மாணவர்கள் படிக்க பல்வேறு உதவிகள் செய்து வருகின்றார்கள் அந்த அறக்கட்டளைக்கு அவரது விப்ரோ நிறுவனத்தில் வரும் லாபத்தில் 34% பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார்

அட்மின் மீடியா ஆதாரம்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.ndtv.com/india-news/azim-premji-does-it-again-donates-over-50-000-crore-to-charity-2007770

அட்மின் மீடியா ஆதாரம்

https://azimpremjifoundation.org/
Share To:

அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய

இந்த செய்தியை படிக்காம இருக்காதீங்க

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் பார்க்க அட்மின் மீடியா ஆப் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்

இந்த செய்தியை படிக்க மறக்காதீங்க