Breaking News

உங்கள் குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் வைக்க இணையதளம் துவக்கிய தமிழக அரசு Modern tamil Baby Boy and Girl Names with Meanings

அட்மின் மீடியா
0

குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் பல்வேறு தளங்களில் காணப்பட்டாலும், அதற்கான விளக்கங்கள் அரிதாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதனைக் களையும் நோக்கில் தமிழ் இணையக் கல்விக்கழகம் அழகிய தமிழ்ப் பெயர்களை அவற்றுக்குரிய விளக்கங்களுடன் அனைவரும் எளிதில் அணுகும் வகையில் வெளியிடுகிறது. Modern tamil Baby Boy and Girl Names with Meanings



தற்போது வெளியிடப்பட்டுள்ள பெயர்கள் மட்டுமல்லாது, கூடுதல் பெயர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் அவ்வப்போது தொடர்ந்து வெளியிடப்படும். மேலும், பயனர்களும் தங்கள் பங்களிப்பினை வழங்கும் வசதி இத்தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் தமிழ் மொழியின் பெருமையை உலகறியும் வண்ணம் பல வகைகளில் திட்டங்களை வகுத்து வருகிறது. இப்படியான நிலையில் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி திமுக பிரமுகர் மயிலை வேலு இல்ல திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அவரின் பேச்சை சுட்டிக்காட்டி நிதின் சிற்றரசு என்ற இணைய பயனாளர் ஒருவர், "குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தை பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே!” என தெரிவித்திருந்தார்.

அவரது ட்வீட்டை மேற்கோள் காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், “குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்!” என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி, குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை தேர்வு செய்யும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், “அன்புக் குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள் அடங்கிய பிரத்யேக இணையப் பக்கத்தைத் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ளது. நமது மழலைச் செல்வங்களுக்குச் சூட்டி மகிழ, தனித்துவமான தமிழ்ப் பெயர்களைத் தேடுபவர்கள் https://tamildigitallibrary.in/tamilnames இந்தத் தளத்தைப் பயன்படுத்தி பயன்பெறுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் தேட இங்கு கிளிக் செய்யவும்:-

https://tamildigitallibrary.in/tamilnames

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback