Breaking News

மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு



மதுரையில் இருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே இந்த புதிய சேவையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அதன்படி எர்ணாகுளம் சந்திப்பு – வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண் 16363) ஒவ்வொரு புதன்கிழமையும் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் வியாழக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் மதுரையை சென்றடையும்.அங்கிருந்து 11.10 மணிக்கு மீண்டும் புறப்பட்டு மாலை 5.35 மணியளவில் வேளாங்கண்ணியை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் சேவை தொடங்கப்படுவதால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு எளிதாக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

மறுமார்க்கமாக வேளாங்கண்ணி – எர்ணாகுளம் சந்திப்பு வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண் 16364) ஒவ்வொரு வியாழக்கிழமையும் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 7.45 மணியளவில் புறப்படும். 

இந்த ரயில் மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் மதுரையை வந்து சேரும். அங்கிருந்து 1.25 மணிக்கு மீண்டும் புறப்பட்டு அன்று காலை 11.55 மணியளவில் எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இந்த வாராந்திர ரயிலின் முதல் சேவை வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த இரு ரயில்களும் கேரளா மற்றும் தமிழகத்தின் பல முக்கிய நிலையங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளன.

இந்த ரயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தன்கோட்டை, கொல்லம், குண்டாரா, கோட்டாரக்கரை, புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல முக்கிய நிலையங்கள் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback