தமிழக சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு!
இந்திய தேர்தல் ஆணையம் இன்று தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்க உள்ளது.
மேற்கு வங்கத்தில் மே 7ம் தேதியும்,தமிழ்நாட்டில் மே 10 ம்தேதியும் , அசாம் மாநிலத்தில் மே 20ம்தேதியும் கேரளாவில் மே 23ம்தேதியும், புதுச்சேரியில் ஜூன் 15 ஆகிய தேதிகளில் சட்டபேரவை முடிவடைகிறது. இந்த தேதிகளுக்கு முன்னதாக புதிய அரசுகள் அமைய வேண்டும் என்பதால், தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே முடித்துவிட்டது.
தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை அறிவித்த உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Tags: தமிழக செய்திகள்
