அக்.1 முதல் அலுமினிய பாத்திரங்களுக்கு ஐ.எஸ்.ஐ., கட்டாயம்..!
அக்.1 முதல் அலுமினிய பாத்திரங்களுக்கு ஐ.எஸ்.ஐ., கட்டாயம்..!
சமையலறையில் பயன்படுத்தப்படும் அலுமினிய பாத்திரங்களுக்கு தர நிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ்., 1660 : 2024 என்ற தர நிலைகளை பராமரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அலுமினியப் பாத்திரங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அனைத்து அலுமினியப் பாத்திரங்களுக்கும் ஐஎஸ்ஐ (ISI) தரச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியத் தர நிர்ணய அமைப்பான பிஐஎஸ் (BIS) இதற்கான தரக் கட்டுப்பாட்டு ஆணையை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி, அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத அலுமினியப் பாத்திரங்களைத் தயாரிக்கவோ, இருப்பு வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ அனுமதி இல்லை. சமையலறைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் சேமிக்கும் கொள்கலன்கள் என அலுமினியம் சார்ந்த அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் இது பொருந்தும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்கள் அல்லது விற்பனையாளர்கள் மீது அபராதம் மற்றும் சிறைத் தண்டனை உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
