வடசென்னை பிரபல ரவுடி தொப்பை கணேசன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
வடசென்னை பிரபல ரவுடி தொப்பை கணேசன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே போலீசை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற பிரபல ரவுடி தொப்பை கணேசன் போலீசாரால் சுட்டுக்கொலை.
இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொப்பை கணேசன் இதுவரை கொள்ளையடித்த பொருட்களை மீட்க, பொருட்களை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அப்போது மாதாவரம் ரவுண்டானா அருகே தொப்பை கணேசன் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த தொப்பை கணேசனை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொப்பை கணேசன் உயிரிழந்ததை உறுதி செய்தனர். தற்போது அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
