Breaking News

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கி சூடு நுாலிழையில் உயிர் தப்பிய வீடியோ Farooq Abdullah Escapes Unhurt in Firing Incident at Jammu Wedding Function

அட்மின் மீடியா
0

 Farooq Abdullah Escapes Unhurt in Firing Incident at Jammu Wedding Function

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனருமான டாக்டர் பரூக் அப்துல்லா, புதன்கிழமை மாலை ஜம்முவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர் தப்பினார். 

ஜம்மு காஷ்மீரில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வழக்கறிஞரின் மகனின் திருமண விழாவில் அப்துல்லா பங்கேற்று இருந்தார். அப்போது விழாவிற்குப் பிறகு விருந்து மண்டபத்திலிருந்து வெளியே வந்த சிறிது நேரத்திலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர் சந்தேக நபரை  மடக்கிப் பிடித்ததன் மூலம் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வெளியான சிசிடிவி வீடியோவின்படி, தனது சகாக்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் சூழ அப்துல்லா நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த கூட்டத்தில் ஒருவராக வந்த நபர், மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து, அப்துல்லாவின் தலைக்கு அருகே கொண்டு சென்று சுட முயன்றுள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர் இதனை உணர்ந்து, மர்ம நபரை தடுத்து நிறுத்தி கீழே தள்ளி சுற்றி வளைத்தனர். அப்போது துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டா கூரையை நோக்கி சென்றது. அப்துல்லா அங்கிருந்து தலையை குனிந்தபடி தப்பிச் சென்றார்.

சிசிடிவி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2031923908799316417

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback