Breaking News

துபாய் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரான் இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம்

அட்மின் மீடியா
0

துபாய் விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரான் இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம் -

துபாய் விமான நிலையம் அருகே இரண்டு டிரோன்கள் விழுந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதில் இரண்டு கானா நாட்டவர்கள் மற்றும் ஒரு வங்கதேசத்தவருக்கு லேசான காயம் மற்றும் ஒரு இந்தியருக்கு மிதமான காயம் ஏற்பட்டுள்ளது.விமான போக்குவரத்து வழக்கம் போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மிக அருகே ஈரான் புதன்கிழமை (மார்ச் 11) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. துபாய் விமான நிலைய ஓடுபாதையில் ட்ரோன்கள் விழுந்து நொறுங்கியதில் கானா நாட்டைச் சேர்ந்த 2 பேர், வங்க தேசத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேர் காயமடைந்தனர். இருப்பினும் விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback