ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் 28 டோல்கேட் கட்டணங்கள் உயர்வு முழு விவரம்
ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் 28 டோல்கேட் கட்டணங்கள் உயர்வு முழு விவரம்
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணங்களில் மாற்றம் செய்து உயர்த்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுமார் 28 முக்கிய சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக சுங்கக் கட்டணம் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இந்த உயர்வு அனைத்து வகை வாகனங்களுக்கும் பொருந்தும்.
குறிப்பாக கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறை பயணம் செய்யும் கட்டணம் தற்போது உள்ளதை விட ரூ.10 முதல் ரூ.40 வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.இலகுரக வாகனங்கள் (கார், ஜீப், வேன்): ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் தற்போதுள்ளதை விட ₹10 முதல் ₹40 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கனரக வாகனங்கள் (பேருந்து, லாரி): இவற்றிற்கான கட்டணம் ₹50 முதல் ₹200 வரை உயரக்கூடும்.மாதாந்திர பாஸ்: உள்ளூர் வாகனங்கள் மற்றும் அடிக்கடி பயணிப்போருக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ₹300 முதல் ₹350 வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பரனூர், சூரப்பட்டு, வானகரம் அதேபோல் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள திண்டிவனம், ஆத்தூர், கிருஷ்ணகிரி, சமயபுரம், கப்பலூர், நாங்குநேரி போன்ற இடங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது.
Tags: தமிழக செய்திகள்
.jpg)